மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினராக நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர் ஷாஜகான் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 04.10.2017
தமிழகம்
தமிழகம்
இந்தியாவின் அடையாளம் தாஜ்மஹால்!
(மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) தாஜ்மஹாலை " உ. பி. மாநிலத்தின் கலாச்சார பாரம்பர்யம்" என்ற பட்டியலிலிருந்து நீக்கி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார் பா ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத். மதவெறி; காவி வெறியாகி புகை மூட்டமாக தாஜ்மஹாலைச் சூழ்ந்திருக்கிறது. தாஜ்மஹாலை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி மதிக்கிறார்கள்; ரசிக்கிறார்கள். சிலருக்கு அது அன்பின் அழகு; சிலருக்கோ காதலின் அடையாளச் சின்னம் . சிலருக்கு கட்டிடக்கலை நாகரிகத்தின் உச்சபட்ச வடிவம்! சிலருக்கோ அது இந்தியாவின் சகோதரத்துவம்! மொத்தத்தில் அது ஏழு உலக அதிசயங்களில் ஒன்று! அது சர்வதேச அளவில் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுச் செல்வங்களில் ஒன்றாகவும் பேணப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்வையிடும் ஒரே சுற்றுலாத்தளம் தாஜ்மஹால்தான்! அதை சுற்றுலாப் பட்டியலிலிருந்து உ.பி., பா.ஜ.க. அரசு நீக்கியிருப்பது அவர்களின் நாணயமற்ற மதவெறி செயல்பாடு என்பதை நாடே அறிந்து விட்டது. வெளிநாடுகளிலிருந்து தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காகவே பலர் இந்தியாவிற்கு வருகின்றனர். பல நாட்டுத் தலைவர்கள் அரசியல் வருகை மேற்கொள்ளும்போது கூட, தாஜ்மஹாலைப் பார்க்க நேரம் ஒதுக்குகிறார்கள்! இந்தியாவில் வேறு எந்த இடத்திற்கும் சர்வதேச அளவில்
ONGC நிறுவனம் உடனடியாக எண்ணெய் குழாய்களை சரிசெய்ய வேண்டும் – எம்.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்..!
(நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதி, திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட நரிமணம், குத்தாலம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மத்தியக்குடி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் மத்தியக்குடி கிராமத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவ்வூரில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து எண்ணெய் செல்லும் குழாயில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட உடைப்பால் எண்ணெய் கசிவு ஏற்பட்டு நிலத்தில் எண்ணெய் வெளியாகியுள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுப்பட்டுள்ள ONGC நிறுவனம் எண்ணெய் குழாய்களை சரிவர பராமரிக்காததால் துருப்பிடித்து குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகள் மூடி மறைக்கப்படுகிறது. ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரியவர்களும், குழந்தைகளும் சுவாச கோளாறுகள் ஏற்ப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றசாட்டுகிறார்கள். ONGC நிறுவனம் இப்பகுதியின் இயற்கை வளங்களை எடுக்கும் நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உருப்படியாக ஏதும்
பொதக்குடி மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!
திருவாரூர்.அக்.03,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 03.10.17
சிறப்பாக நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட மஜக நிர்வாக கூட்டம்…!
குடந்தை.அக்.03., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக் கூட்டம் நேற்று மாலை கும்பகோணம் அனஸ் ரெஸ்டாரண்டில் இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராசுதீன், மாநில வர்த்தக அணி செயளாலர் நாட்டாமை யூசுப் ராஜா, தலைமை கழக பேச்சாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் உடன் இருந்தனர். மாவட்ட நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமான முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, அணி, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 02.10.17