வேலூர்.நவ.09., வேலூர் மாநகர விருதம்பட்டு 15வது வார்டு மஜக நிர்வாகிகளை, கிளை அலுவலகத்தில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம் உட்பட மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி மற்றும் முன்னாள் மாநகர செயலாளர் O.S.T.அஸ்கர் ஆகியோர் நேற்று கிளை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், கிளை பொருளாளர் முஹம்மத் இஸ்மாயில், கிளை துணைச் செயலாளர் அஸ்கர் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர். உடன் சகோ.மூஸா, சகோ,சலீம் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 08.11.2017
தமிழகம்
தமிழகம்
மதரஸாவை மூட முயற்சி…! தடுத்து நிறுத்திய கூட்டமைப்பினர்..!!
திருவள்ளூர்.நவ.09., திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடியில் மஸ்ஜிதே முகம்மதியா பள்ளிவாசலுக்கு சொந்தமான 13 சென்ட் நிலத்தில் பெண்கள் அரபு பாடசாலை நடந்து வருகிறது. இதில் சுமார் 200 பெண்கள் மதரசவில் ஓதி வருகின்றனர். இந்த இடம் ஆவடி நகராட்சிக்கு சொந்தமானது எனக்கூறி மதரசவை அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் நோட்டிஸ் அனுப்பியதோடு, அப்புறப்படுத்தும் பணியையும் மேற்கொள்ள முயற்ச்சி செய்தார். இதை கண்டித்து ஆவடி அணைத்து ஜமாத் கூட்டமைப்புகள் சார்பாக ஆவடி தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து பள்ளிவாசல் தொடர்பான ஆவனங்களை காண்பித்து மதரசவை அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஜமாத் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மதரஸாவை அப்புறப்படுத்தும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவுசெயதனர். மனிதநேய ஜநாயக கட்சி சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் மற்றும் ஆவடி நகர செயலாளர் சாகுல், நகர பொருளாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம்
மஜக முயற்சியால் சாலைகள் சீரமைப்பு..!
வேலூர்.நவ.09., வேலூர் மாநகரம் 53 வார்டு R.N.பாளையம் புதுதெரு, ஜானிபூந்தோட்டம், ஜன்டாதெரு, சின்னையா லேவுட் ஆகிய பகுதிகளில் சாலைகள் குன்டும் குழியுமாக மக்கள் நடந்து செல்வதற்க்கும் சிரமாக இருந்ததை அடுத்து மனிதநேய ஜனநாயக கட்சி 53 வது வார்டு கிளையின் சார்பாக மாநகர பொறியாளர் சுப்பிரமணியம் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உதவி பொறியாளர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்து படிப்படியாக சீர்செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதை தொடர்ந்து முதல் கட்டமாக சமத் பள்ளிவாசல் அருகில் உள்ள சாலைகள் சரிசெய்யும் பணி தொடங்கியது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 08.11.2017
நாகை தொகுதி திருமருகல் ஒன்றியத்தில் மழை பாதிப்புகளை கேட்டறிந்தார் MLA!
(தொகுப்பு 3) நாகை தொகுதிக்குட்பட்ட நாகை நகரம், நாகை ஒன்றியம் ஆகியவற்றில் மழைப் பாதிப்புகள் குறித்து மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், திருமருகல் ஒன்றியத்திற்கும் வருகை தந்து மக்களை சந்தித்தார். வாஞ்சூர் பகுதிக்கு வந்தவர் அங்குள்ள மீன் மார்க்கெட் பகுதியில் மீனவர்களையும், பொது மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டார். அங்குள்ள மீன் மார்க்கெட் கூரை இடியும் நிலையில் இருப்பதால், அதை இடிந்து விட்டு மீன் மார்க்கெட்டை புதுப்பிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். பிறகு, பனங்குடி ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரத்திற்கு வருகை தந்து, பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கடந்த 20 ஆண்டுகளில் தங்கள் பகுதிக்கு குறை கேட்க வந்த முதல் MLA நீங்கள்தான் என அப்பகுதி மக்கள் வரவேற்றனர். பிறகு, மீனவர் காலனி, சுனாமி குடியிறுப்பு பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு, முட்டம் பனங்குடி, உத்தம சோழபுரம், குத்தாலம், கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கும் வருகை தந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் கொடுத்த மனுக்களை குறித்துக்
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்…!
கோவை.நவ.09., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நேற்று (08.11.17) மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர் சங்க செயலாளர் அக்பர், சூற்றுச்சூழல் அணி செயலாளர் முஹம்மது சலீம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, வழக்கறிஞர் அணி செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. வருகின்ற டிசம்பர் 6 இரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 2.வருகின்ற 12.11.17.அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 08.11.17