சென்னை. டிச.15., தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் கட்டமைப்புகளில் சிறப்பாக செயல்பட்டவரும், மிகச்சிறந்த களப்பணியாளருமான அண்ணன் A.S.அலாவுதீன் அவர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெயினுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், தைமியா, சாதிக் பாட்ஷா, சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் பங்கேற்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்சியில் இணைந்து தலைமை நிர்வாக குழுவி்ல் இடம் பெற்ற J.S.ரிபாய் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், சீனி முஹம்மது ஆகியோரும் பங்கேற்ற தலைமை நிர்வாக குழு இன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது அதன் பிறகு இந்த இணைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜக வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை 15.12.17
தமிழகம்
தமிழகம்
கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள் ..!
கோவை.டிச.14., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும் ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும், அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்டம் வால்பாறையில் மஜகவின் பணிகளால் ஈர்க்கப்பட்டு தன்னெழுச்சியாக சகோதரர்கள் I.அப்துல்ஹக்கீம், S.கரீம், H.சையதுரஹீம், H.செய்யதலி, U.அப்துல்முனாப், I.அக்கீம் ஆகியோர் கோவை மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா.இஷாக், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, தெற்கு பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், ரஹ்மத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் அன்வர், காஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்... விரைவில் வால்பாறையில் பிரமாண்ட இணைப்பு விழா நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 14.12.17
மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் தந்தை மரணம்! மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!
சென்னை.டிச.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் தோழர். பார்த்திபன் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூன்_ரசீது அவர்கள் இன்று பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இறுதி சடங்கில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர் , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது மற்றும் இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 13.12.17
தா.பாண்டியன் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக பொருளாளர்
சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் #தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.. இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் M.M.பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 13.12.2017
குடியாத்தம் நகரத்தில் டாம்கோ கடன் திட்ட துவக்க விழா..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
வேலூர்.டிச.13., வேலூர் மாவட்டம் சிறுபான்மையினருக்கான கடன் உதவி திட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ)கடன் திட்டங்களுக்கான கடன் விண்ணப்பங்கள் வழங்கும் விழா குடியாத்தம் வட்டத்தில் இன்று (13.12.2017) குடியாத்தம் MBS நகர் திருமண மண்டபம் அஞ்சுமன் தெரு நடுப்பேட்டையில் மாலை 03-மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நல அலுவலர் திரு.S.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளும், கூட்டுறவு வங்கி தலைவர் பாஸ்கர், குடியாத்தம் வட்டாசியர் மற்றும் சிறுபான்மை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நாவஸ், மஜக நகர செயலாளர் S.அனீஸ், அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் இன்சாப் மாநில துணை செயலாளர் அலியார் அதாவுல்லா, லயன்ஸ் கிளப் தலைவர் S.கரிமுல்லா, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் ரஹமத்துல்லா,TMJK இஸ்மாயில், A.தாஜுதீன், ஜிலான், பீடி சங்க தலைவர் வாஹித், மற்றும் காதர் பாஷா, V.R.ரபீக், ADMK சலீம், காய்கறி வியாபாரி சங்க தலைவர் ஜாவித் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான 500 க்கும் மேற்பட்ட முஸ்லீம் பெண்களும் ,