நவ.25, நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் மஜக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமாக மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உத்தரவின் பேரில் ஏனங்குடி, புத்தகரம், கேதாரிமங்கலம், NS நகர், கீரங்குடி சடையமூலை ஆகிய பகுதிகளுக்கு மஜக திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் மஜக பேரிடர் குழுவினர் ஊர் தலைவர்களிடம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறினர். மேலும் ஏனங்குடி, புத்தகரம், ஆதலையூர், கோட்டூர், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் கோட்டூர் மேலத்தெரு கோயில் அருகில் கூடியிருந்த இளைஞர்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும் அங்கிருக்கும் மக்களை அழைத்து வந்து பள்ளிகூடங்களில் தங்கி கொள்ளுமாறும் தேவையான உணவுகளை மஜகவினர் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
நிவர் புயல்
நாகை ஒன்றியம் மஞ்சக்கொல்லை அந்தணப்பேட்டையில் மஜக பேரிடர் மீட்புக்குழு சார்பில் தாழ்வான பகுதி மக்களிடம் நேரில் சென்று முன்னெச்சரிக்கை!
நவ.25, நாகை ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சக்கொல்லை, அந்தணப்பேட்டை ஊராட்சிகளில் காலை முதல் மஜக பேரிடர் மீட்பு குழு மக்கள் தங்கியிருந்த மண்டபங்களுக்கு சென்று அங்கு இருந்தவர்களுக்கு உணவு வசதி குறித்து கேட்டறிந்தனர். தாழ்வான குடிசைகளில் வசிப்பவர்களிடம் புயலின் தீவிரத்தை எடுத்து கூறி அரசு சார்பாக ஏற்பாடு செய்திருக்க கூடிய மண்டபங்களுக்கு செல்லுமாறு முன்னெச்சரிக்கை செய்தனர். தொடர்ந்து அந்தணப்பேட்டை ஊராட்சி அலுவலகம் சென்று முன் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். அருகில் உள்ள மக்களிடம் அரசு சார்பாக ஏற்பாடு செய்திருக்க கூடிய மண்டபங்கள், பள்ளி கூடங்கள் சென்று தங்குமாறு எடுத்து கூறினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
நிவர் புயல் – தஞ்சை முன்னெச்சரிக்கை பணிகளில் மஜக பேரிடர் மீட்பு குழு
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு பேரூராட்சி JCB உதவியுடன் புதுத்தெருவில் இருந்து காலேஜ் முக்கம் வரை மழை வெள்ள நீர் வடியும் வகையில் கழிவுநீர் வாய்க்கலை தூர் வாரும் பணியினை மஜக பேரிடர் மீட்பு குழுவினர் இரண்டு நாட்களாக முன்னின்று செய்தனர். #களத்தில்_மஜக #மஜக_பேரிடர்_மீட்பு_குழு #nivarcyclone #MJKrescueteam
நிவர் புயல் – கடலூர் முன்னெச்சரிக்கை பணிகளில் மஜக பேரிடர் மீட்பு குழு
நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட கோவை MJTS கூட்டத்தில் தீர்மானம்!
நவ.25., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTSன் புதிய பாதை மீட்டர் ஆட்டோ ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் உசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் தற்போது டெல்டா மாவட்டங்களில் நிவர் புயலால் காற்றுடன் கடும் மழை இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது எனவே தலைமை அறிவித்தால் மீட்பு பணிகளுக்கு கோவையிலிருந்து செல்ல தயாராக உள்ளதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன், அன்சர், ரியாசுதீன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 24.11.2020