திருமருகல் ஒன்றிய ஊராட்சிகளில் முன்னேற்பாடுகளை பார்வையிட்ட மஜக பேரிடர் மீட்புக்குழு!


நவ.25,

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் மஜக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமாக மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உத்தரவின் பேரில் ஏனங்குடி, புத்தகரம், கேதாரிமங்கலம், NS நகர், கீரங்குடி சடையமூலை ஆகிய பகுதிகளுக்கு மஜக திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் மஜக பேரிடர் குழுவினர் ஊர் தலைவர்களிடம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதன் முக்கியத்துவத்தை எடுத்து கூறினர்.

மேலும் ஏனங்குடி, புத்தகரம், ஆதலையூர், கோட்டூர், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் கோட்டூர் மேலத்தெரு கோயில் அருகில் கூடியிருந்த இளைஞர்களை சந்தித்து பாதுகாப்பாக இருக்குமாறும் அங்கிருக்கும் மக்களை அழைத்து வந்து பள்ளிகூடங்களில் தங்கி கொள்ளுமாறும் தேவையான உணவுகளை மஜகவினர் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.