நவ.30, தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் எதிர்வரும் டிச.31 வரை முன்னெடுக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் திருச்சியில் தொடர்ந்து மஜக-வில் வியாபாரிகள், ஓட்டுநர்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் இணைந்து வருகின்றனர். திருச்சியில் நேற்று நாகமங்கலம், பஞ்சப்பூர் மற்றும் துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களை தன்னெழுச்சியாக மஜக வில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பேரா. மைதீன் அப்துல் காதர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்வுகளில் அந்தோணிராஜ், சையது முஸ்தபா, அப்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #திருச்சி_மாவட்டம்.
உறுப்பினர் சேர்க்கை
வேதாரண்யம் தொகுதியில் மூன்றாம் கட்ட மஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம்!
நாகை.நவ.20, வேதாரண்யம் தொகுதி கரியாப்பட்டினத்தில் மஜக வின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மக்கள் வரவேற்புடன் நடைப்பெற்றது. ஆர்வத்துடன் பங்கேற்றவர்களுக்கு 15 நாட்களுக்குள் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும், புகைப்படம் தராதவர்களுக்கு புகைப்படமின்றி உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இம்முகாம் வேதாரண்யம் தொகுதியில் நடத்தப்படும் 3 வது கட்ட முகாம் ஆகும். தொடர்ந்து டிச.31 வரை பல்வேறு பகுதிகளில் இம்முகாம்கள் முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில், மஜக நகர நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #நாகை_மாவட்டம்.
வேலூர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்.! மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத் பங்கேற்பு.!
நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா நகரத்தில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் உற்சாகமாக நடைபெற்றது. பள்ளிகொண்டா நகர செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் S.G.அப்சர்சையத் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் மற்றும் பள்ளிகொண்ட நகர பொருளாளர் GS.சத்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜகவில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர், மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜகவினர் முன்னெடுத்துள்ளனர். இம்முகாமில், நகர துணை செயலாளர்கள் நஸ்ரு, நியாமத்துல்லா, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #வேலூர்_மாவட்டம். 14.11.2020
மேட்டுப்பாளையத்தில் தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!
நவ.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகளை விளக்கிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே மஜக வினரால் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் ஈர்க்கப்பட்டு கோவை மேட்டுப்பாளையத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை வடக்கு கோவை மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் வழங்கிட மாநில செயற்குழு உறுப்பினர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் SN.சேட், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKITWING #MJK2021 #கோவை_வடக்கு_மாவட்டம். 10.11.2020
திருச்சியில் மஜகவில் தன்னெழுச்சியாக இணையும் புதியவர்கள்!
நவ.08, மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் பகுதியாக திருச்சி திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலத்தில் இளைஞர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள் என பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். புதியவர்களை வரவேற்று கட்சியின் செயற்பாடுகளை மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மைதீன் அப்துல் காதர் எடுத்து கூறினார். தொடர்ந்து அரியமங்கலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நாட்களில் அப்பகுதி முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜமாலுதீன், முகமது பீர்ஷா மற்றும் கிளை நிர்வாகிகள் காதர், ஷாஜகான் உள்பட திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #திருச்சி_மாவட்டம்