திருச்சியில் மஜகவில் தன்னெழுச்சியாக இணையும் புதியவர்கள்!


நவ.08,
மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் பகுதியாக திருச்சி திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலத்தில் இளைஞர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள் என பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

புதியவர்களை வரவேற்று கட்சியின் செயற்பாடுகளை மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மைதீன் அப்துல் காதர் எடுத்து கூறினார்.

தொடர்ந்து அரியமங்கலம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நாட்களில் அப்பகுதி முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜமாலுதீன், முகமது பீர்ஷா மற்றும் கிளை நிர்வாகிகள் காதர், ஷாஜகான் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#திருச்சி_மாவட்டம்