நெல்லை.செப்.06., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதி சார்பில் பகுதி செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான் மற்றும் மேலப்பாளையம் நகர நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மஜக நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்பாஸ், மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் புகாரி, நெல்லை பகுதி பொருளாளர் பீர், பகுதி துணை செயலாளர் அலாவுதீன், MJTS மேலப்பாளையம் நகர செயலாளர் மைதீன், MJTS பேட்டை நகர செயலாளர் ஹபிபுல்லாஹ், பேட்டை நகர பொருளாளர் அசன் கனி, துணை செயலாளர் சம்சு, பேட்டை நகர மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மேலப்பாளையம் பகுதியை சார்ந்த சுடலை, ரவி,
கொரோனா தடுப்பு நடவடிக்கை
கறம்பக்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
கறம்பக்குடி : செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மருத்துவ சேவை அணி சார்பில் நகர செயலாளர் சையது இப்ராஹீம், அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர், ஷேக் அப்துல்லா, கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் பால சுப்பிரமணியன், ஹோட்டல் சங்க தலைவர் K. சுரேஷ், தமுஎச தலைவர் இளைய மனோகரன், சுகாதார ஆய்வாளர் துரை மாணிக்கம், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் முஹம்மதுஜான் , மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர், நகர செயலாளர் ஆசை அப்துல்லா, நகர பொருளாளர் ஜியாவுதீன், நகர இளைஞரணி செயலாளர் முகமது மன்சூர், ஒன்றிய செயலாளர் முகம்மது அப்துல்லா, உள்ளிட்ட ஒன்றிய , நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர். இம்முகாமில் 700க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசம், வழங்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #கறம்பக்குடி_நகரம் #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 02.09.2020
மஜக வேலூர் மாவட்டத்தில் 2ம் கட்டமாக கபசுர குடிநீர் விநியோகம்…!!
வேலூர்.ஆக.31., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சார்பில் 2 ஆம் கட்டமாக வேலூர் மாநகரின் R.N.பாளையம் கடைவீதியில் மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் அன்சர் அவர்களின் தலைமையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது யாசின் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், ஷமீல், சாதிக், பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 31.08.2020
மஜக மருத்துவ சேவை அணி நெல்லை மாவட்டம் சார்பாக கபசுரக்குடிநீர் விநியோகம்.!
நெல்லை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை பழையபேட்டை இரானி அண்ணா கலைகல்லூரி அருகில் உள்ள காந்திநகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் புகாரி தலைமை தாங்க, பேட்டை நகர துணை செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, காந்திநகர் பள்ளி ஜமாத் தலைவர் முனிர் அவர்கள், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் நாகூர்மீரான், மேலப்பாளையம் பகுதி செயலாளர் தமீம் அன்சாரி, நெல்லை பகுதி துணை செயலாளர் அலாவுதீன், மேலப்பாளையம் அப்துல், ஜெய்லானி, முஜாகித் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேட்டை நகர செயலாளர் இரா.முத்துக்குமார், பொருளாளர் அசன்கனி, MJTS நகர செயலாளர்கள் A1மைதீன், ஹபிபுல்லாஹ், காந்திநகர் ரவி, பேட்டை முருகேசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கபசுரக்குடிநீரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் பருகி பயணடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது. தகவல்; #மஜக_தகவல்தொழில்நுட்பஅணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 30-08-2020
மஜக வேலூர் மாவட்டத்தில் கபசுரக்குடிநீர் விநியோகம்!!
வேலூர்.ஆக.29., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேலூர் மாநகரின் பழைய மீன் மார்க்கெட் அருகில் வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் படெல் ஷமீல் அவர்களின் தலைமையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது யாசின் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், அமீன், சாதிக், அன்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 29-08-2020