கறம்பக்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!


கறம்பக்குடி : செப்:02.,

மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் மருத்துவ சேவை அணி சார்பில் நகர செயலாளர் சையது இப்ராஹீம், அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கறம்பக்குடி வட்டாட்சியர், ஷேக் அப்துல்லா, கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் பால சுப்பிரமணியன், ஹோட்டல் சங்க தலைவர் K. சுரேஷ், தமுஎச தலைவர் இளைய மனோகரன், சுகாதார ஆய்வாளர் துரை மாணிக்கம், ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

இதில் மாவட்ட செயலாளர் முஹம்மதுஜான் , மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் காதர், நகர செயலாளர் ஆசை அப்துல்லா, நகர பொருளாளர் ஜியாவுதீன், நகர இளைஞரணி செயலாளர் முகமது மன்சூர், ஒன்றிய செயலாளர் முகம்மது அப்துல்லா, உள்ளிட்ட ஒன்றிய , நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இம்முகாமில் 700க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசம், வழங்கப்பட்டது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#கறம்பக்குடி_நகரம்
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
02.09.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.