சென்னை.ஆகஸ்ட்.17., கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக 16-08-2020 அன்று "புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இணையவழி கருத்தரங்கம்" நடைபெற்றது. Zoom காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் பங்கேற்று புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஆபத்துகள் குறித்து கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேரலை மூலமாக இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வையாளர்களாக இணைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING 16-08-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
தென்காசியில் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்த மஜகவினர்!!
தென்காசி:ஆக17., இந்திய தேசத்தின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக இரத்த தானம் நிகழ்ச்சி மாவட்ட துணை செயலாளர் ஆதம்பின் ஹனிபா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது இபுராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை இனாயத்துல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, பண்பொழி அபுதாஹிர், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரகுமான், மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 15/08/2020
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மஜகவினர்!!
மேட்டுப்பாளையம்: ஆக.16., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட செயலாளர் VMT ஜபர் அவர்களின் தலைமையில் அரசு மருத்துவமணையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் மன்சூர், யாசர், மாவட்ட துணை செயலாளர் SN சேட், யாசர்அரபாத், MJTS மாவட்ட செயலாளர் முகம்மது அப்சல் ,நகர செயலாளர் ரசீது, ஆசீக்., சபி அகமது, ஆகியோர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல்" #மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி #MJK_IT_WING #மேட்டுப்பாளையம்_நகரம் #கோவை_வடக்கு_மாவட்டம் 16.8.2020
மஜக திருச்சி விமான நிலைய சேவைக்குழுவின் தொடர் பணிகள்.! கத்தார் மற்றும் அபுதாபியிலிருந்து வந்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்.!
திருச்சி-ஆகஸ்ட்.16., வெளிநாடுகளிலிருந்து கொரோனா நெருக்கடி காரணமாக வேலையிலந்து தமிழகம் மற்றும் கேரளா வழியாக சொந்த ஊருக்கு வருகை தரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மஜக திருச்சி மாவட்ட விமான நிலைய சேவை குழு சார்பாக நேற்று (15-08-2020) இரவு கத்தார் மற்றும் அபுதாபியிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தனர். மேலும் வயதான நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து பத்திரமாக, அவர் அவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். இம்மனிதநேய சேவையில் மாவட்டச்செயலாளர் பாபு பாய், மாவட்ட துணை செயலாளர் எம்.பக்ருதீன், மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிச் செயலாளர் செய்யது அபுதாகிர் உள்ளட்ட மஜகவினர் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 15/8/2020
தென்காசியில் மஜக சார்பில் மரக்கன்றுகள் நட்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வினியோகம்!
தென்காசி.ஆக.16., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான் அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், அவர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் கொரோனா நோய் எதிர்ப்பு ஆர் செனிக்கம் ஆல்பம் 30c மருந்தினை வழங்கினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர பொருளாளர் இத்ரீஸ் , நகரத் துணைச் செயலாளர் இஸ்மாயில், மாலிக் , நகர வர்த்தக அணி செயலாளர் காஜா மைதீன் , மருத்துவ அணிச் செயலாளர் ஷேக் மைதீன் , திவான் மைதீன் மற்றும் ஜமாத் கமிட்டி செயலாளர் நைனார் முஹம்மது , ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் #15-08-2020