தென்காசியில் மஜக சார்பில் மரக்கன்றுகள் நட்டு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வினியோகம்!


தென்காசி.ஆக.16.,

74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான் அவர்கள் தலைமையில் கொரோனா தொற்று எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டது.

இதில் மனித உரிமை பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், அவர்கள் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் கொரோனா நோய் எதிர்ப்பு ஆர் செனிக்கம் ஆல்பம் 30c மருந்தினை வழங்கினார்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர பொருளாளர் இத்ரீஸ் , நகரத் துணைச் செயலாளர் இஸ்மாயில், மாலிக் , நகர வர்த்தக அணி செயலாளர் காஜா மைதீன் , மருத்துவ அணிச் செயலாளர் ஷேக் மைதீன் , திவான் மைதீன் மற்றும் ஜமாத் கமிட்டி செயலாளர் நைனார் முஹம்மது , ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
#15-08-2020