திருச்சி-ஆகஸ்ட்.16.,
வெளிநாடுகளிலிருந்து கொரோனா நெருக்கடி காரணமாக வேலையிலந்து தமிழகம் மற்றும் கேரளா வழியாக சொந்த ஊருக்கு வருகை தரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக மஜக திருச்சி மாவட்ட விமான நிலைய சேவை குழு சார்பாக நேற்று (15-08-2020) இரவு கத்தார் மற்றும் அபுதாபியிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தனர்.
மேலும் வயதான நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து பத்திரமாக, அவர் அவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
இம்மனிதநேய சேவையில் மாவட்டச்செயலாளர் பாபு பாய், மாவட்ட துணை செயலாளர் எம்.பக்ருதீன், மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிச் செயலாளர் செய்யது அபுதாகிர் உள்ளட்ட மஜகவினர் ஈடுபட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருச்சி_மாவட்டம்
15/8/2020