ஜூலை.18, கடலூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்டுமன்னார்க்கோயிலைச் சேர்ந்த திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் வரவேற்று கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை எடுத்து கூறி மாவட்ட, துணை, அணி, ஒன்றிய நிர்வாகிகள் மஜக அட்டைகளை வழங்கினர். தொடர்ந்து, மஜக நகர நிர்வாகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் பரவலாக மனிதநேய ஜனநாயக கட்சியில் கடந்த இருவாரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் இணைந்துள்ளதும், பல புதிய கிளை நிர்வாகங்கள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம். 17/07/2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
தென்காசியில் மஜக வின் எழுச்சி!!தன்னார்வத்துடன் மஜக வில் இணையும் மனிதநேய சொந்தங்கள்!!
தென்காசி: ஜூலை.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். மாவட்டச்செயலாளர் பீர் மைதீன், முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் இனாயத்துல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது பஷீர், ஒன்றிய செயலாளர் அஹமது அலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் ரவி, ஆகியோர் உடனிருந்தனர்.. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்காசி_மாவட்டம் 17/07/2020
திருப்பந்துருத்தியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.17, தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கபசுரக் குடிநீர் இரண்டாம் கட்டமாக தெற்கு ராஜவீதியில் வழங்கப்பட்டது. இதில் திருப்பந்துருத்தி ஜமாத் தலைவர் K.T.A ஜாகிர் உசேன் கலந்து கொண்டு விநியோகத்தை துவக்கி வைக்க குழந்தைநல டாக்டர் சுவாமிநாதன், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) S.ஹபீப் ரஹ்மான், கிளை செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர்கள் பாரிஸ், சலீம் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவையாறு_ஒன்றியம் #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
கண்டியூரில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஜூலை.17, தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம் கண்டியூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வியாபாரிகள், பொதுமக்கள் என சுமார் 250 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி அருந்தி பயனடைந்தனர். இதில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) S.ஹபீப் ரஹ்மான், கிளை செயலாளர் ரோஜ் (எ) முபாரக் அலி, பொருளாளர் முகம்மது யூசப், துணைச் செயலாளர்கள் சையத் இஸ்மத் பாட்ஷா, தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவையாறு_ஒன்றியம் #தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..! தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு..!
ஜூலை.17., தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும், கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், மவுண்ட் கோபால், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி கூட்டமைப்பு சார்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதீன், அவர்கள் குறிப்பிட்ட நபர்களின் முகநூல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கூட்டமைப்பை சேர்ந்த கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 17-07-2020