தென்காசி: ஜூலை.18.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர்.
மாவட்டச்செயலாளர் பீர் மைதீன், முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல் பாடுகள் குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் இனாயத்துல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஹம்மது பஷீர், ஒன்றிய செயலாளர் அஹமது அலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க செயலாளர் ரவி, ஆகியோர் உடனிருந்தனர்..
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
17/07/2020