ஜூலை.17,
தஞ்சை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கபசுரக் குடிநீர் இரண்டாம் கட்டமாக தெற்கு ராஜவீதியில் வழங்கப்பட்டது.
இதில் திருப்பந்துருத்தி ஜமாத் தலைவர் K.T.A ஜாகிர் உசேன் கலந்து கொண்டு விநியோகத்தை துவக்கி வைக்க குழந்தைநல டாக்டர் சுவாமிநாதன், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர்.
இதில் திருவையாறு ஒன்றிய செயலாளர் சேட்டு (எ) S.ஹபீப் ரஹ்மான், கிளை செயலாளர் முகமது காலித், பொருளாளர் அசார், துணைச் செயலாளர்கள் பாரிஸ், சலீம் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகித்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING #திருவையாறு_ஒன்றியம்
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.