தென்காசி:ஆக.06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தென்காசி மாவட்டம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர தடுப்பு நடவடிக்கை பணியாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் வடகரை பேரூர் கிளையின் சார்பில் கொரோனா நோய் தொற்று எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம் வடகரை பேரூர் கிளை செயலாளர் S.Mமுகம்மது இல்யாஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட செயலாளர் M. பீர் மைதீன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் M.முகம்மதுபஷீர், வடகரை பேரூர் கிளை துணை செயலாளர்கள் K. அமானுல்லா, K. செய்யது அலி, இளைஞரணி செயலாளர் M.முகம்மது அசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் A.நவாப் சர்புதீன், மற்றும் அச்சன் புதூர் கிளை பொருளாளர் கமால்தீன், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 05.08.2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
இரவு பகலாக சேவை செய்து வரும் மஜக விமானநிலைய சேவைக்குழு.!
திருச்சி.ஆகஸ்ட்.08., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நள்ளிரவில் துளசியாப்பட்டினத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் வருவதாகவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்கும்படி மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் திருச்சி மாவட்டச்செயலாளரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விமான நிலையம் சென்ற மஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் விமான நிலையம் வந்திறங்கிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்து, அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சொந்த ஊருக்கு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதன் பின் வந்த மற்றொரு விமானத்தில் வருகை தந்த ஷார்ஜாவை சேர்ந்தவர்கள், மஜக-வின் பணிகளை முகநூல் வாயிலாக அறிந்து திருச்சி மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரினர், அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர். மேலும் அதே விமானத்தில் வந்திறங்கிய மாயவரம் மற்றும்
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பழனியில் ஆர்ப்பாட்டம்!!மஜக பங்கேற்பு!!
பழனி:ஆக.04., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்த்து திராவிட விடுதலை கழகம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் பழனி சாந்துமுகம்மது தலைமையில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம் 03.08.2020
புருணையிலிருந்து தாயகம் வந்த தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்!
கோவை:ஆக.04., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சேவை செய்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை, மற்றும் நாகூரை சேர்ந்தவர்கள் கடந்த வாரம் புருணைலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அரசு அறிவுறுத்தலின்படி அவர்கள் கடந்த வாரம் முதல் கோவையிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் அவர்களை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்ததால் செய்வதறியாது தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் பைசல், ஆகியோர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து பேசினர் பிறகு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று வாகன ஏற்பாடுகள் செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 04.08.2020
கத்தாரிலிருந்து தாயகம் வந்தவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்!!
திருச்சி:ஆக.04., வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சேவை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கத்தாரிலிருந்து இராமநாதபுரம், மற்றும் அரியலூர், மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் வயதான மூதாட்டி, ஆகியோர் துணையில்லாமல் தனியாக திருச்சி விமான நிலையம் வருவதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் திருச்சி மஜக விமான நிலைய சேவைக்குழுவினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் மாவட்டச் செயலாளர் பாபுபாய், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பக்ருதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் காதர், ஆகியோர் விமான நிலையம் சென்று அவர்களை வரவேற்று வேண்டிய உதவிகளை செய்துகொடுத்தனர். மேலும் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்த அதிகாரிகள் திருச்சியிலேயே தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்ப முயற்சித்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளிடம் பேசிய மஜக-வினர் கர்ப்பிணிப் பெண் மற்றும் மூதாட்டி குறித்து எடுத்துக்கூறி அதிகாரிகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அவர்களை சொந்த ஊரில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி பெற்று வாகனம் ஏற்பாடு செய்து மஜகவினர் அவர்களை வழியனுப்பி