மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் சமூக இடைவெளியுடன் மாநில செயலாளர் H.ராசுதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சங்கை தாஜ்தீன், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் தைக்கால் ஷாஜஹான், நீடுர் லியாகத் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெப்ருதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அன்வர்தீன், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் நிஜாமுதீன், சாதிக், ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் மாவட்ட துணை செயலாளர் ஹாஜா சலிம், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மயிலாடுதுறை_மாவட்டம் 14.08.2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
பெரம்பலூரில் மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!
பெரம்பலூர்:ஆக.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன், ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஆசிப்ராஜா, அப்துல் ஹக்கீம், அப்துல் ரஹ்மான், கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #பெரம்பலூர்_மாவட்டம். 14/08/2020
இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் – தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி.!
மஜக திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.!
திருச்சி.ஆகஸ்ட்.13., திருச்சியில் வேகமாக பரவி வரும் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கிளையின் சார்பாக இரண்டாம் கட்டமாக நடைபெற்றது, நிகழ்வுக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) மாவட்டச்செயலாளர் G.K.காதர் அவர்கள் தலைமை தாங்க, மஜக திருச்சி மாவட்டச் செயலாளர் பாபுபாய் அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்து அரியமங்கலம், உக்கடை போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஜமாலுதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாவட்ட வணிகர் சங்க (MJVS ) செயலாளர் அபூபக்கர் சித்தீக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்பாஸ் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மற்றும் அரியமங்கலம் கிளையின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 13/8/2020
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டம் கூடலூரில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மஜகவினர்!!
நீலகிரி.ஆக.13., தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கூடலூர் கோக்கால் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். மஜக தொண்டர்களின் தன்னார்வப் பணியை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 13.08.2020