மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று குடியரசு தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தார். இன்று காலை இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அகமது, விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக் ஆகியோருடன் சட்டமன்றம் சென்றார். வழக்கமான வெள்ளை ஆடைகளுடன் செல்லாமல், கலர் ஆடைகளுடன் வந்ததும், அமைச்சர்களும், MLA க்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் அவரை பார்த்து 'தமாஷ்' செய்தனர். ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை, எங்கப்பா தமிமுன் அன்சாரி? என்று சொல்லிவிட்டு, மாணவர்கள் வாக்களிக்கக்கூடாது? இது உங்களுக்கு தெரியுமா? என கிண்டலடித்தார். பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் விஜயதரணி MLA, தமிமுன் அன்சாரியை பார்த்து 'நான் யாரென்று குழம்பிட்டேன்' என்று கூறிவிட்டு, வாக்கு சாவடிக்கு அழைத்துப் போனார். அங்கு அதிமுக மற்றும் காங்கிரஸ் MLA க்கள் அவரை வரவேற்று ஜாலியாக பேசினர். இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானே இந்த முடிவு? மற்றப்படி எங்களை விட்டும் போக மாட்டீர்களே என உரிமையுடன் கேட்க, காங்கிரஸ் MLA க்கள் அதற்கு ஜாலியாக பதிலளித்தனர். பிறகு வாக்களிக்க அவர் உள்ளே வந்ததும், புகைப்பட கலைஞர்கள் படத்திற்கு 'போஸ்' கொடுக்க கூற கேமராக்கள் மின்னின. பிறகு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை
சட்டமன்றம்
சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்!
#நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்! #நாகூர்_தர்ஹா சொத்துக்களை கண்டறிய வேண்டும்! #சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்! (#மஜக_பொதுச்_செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற உரை- பகுதி 4) பேரவை தலைவர் அவர்களே ... #மீன்வள_பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் தொகுதியில் கட்டப்பட்டு வரும் மீன்வள பல்கலைக்கழகத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். #அரசு_மருத்துவமனை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு DNP அந்தஸ்து தர வேண்டும். நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென்ற எனது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . (DNP அந்தஸ்து கிடைத்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தொடரின் போது MRI ஸ்கேன் வசதிகள் உள்பட 9 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே) #துறைமுகம் நாகப்பட்டினம் துறைமுகத்தை தனியார் பங்கேற்போடு பசுமைத் துறைமுகமாக ரூ.350 கோடிக்கு தரம் உயர்த்தி செயல்படுத்தப்படும் என்று அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது விதி 110-ன் கீழ் அறிவித்தார்கள். எனவே , அந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் . #தனி_தாலுக்கா திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் . அதை தனி தாலுக்கா வாக
நீட் தேர்வுக்கு தற்காலிக தீர்வு தேவை! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
(சிறுபான்மை மானியக் கோரிக்கையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கடந்த 13/07/17 அன்று பேசியது...) பாகம்-1 மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! NEET தேர்வு குறித்து இந்த அவையிலே நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். மத்திய அரசு இவ்விஷயத்திலே ஒருவகையான போக்கைக் கையாளுகிறது. அதனால் தமிழ்நாட்டிலே மாணவ-மாணவிகள் பாதிக்கபட்டுள்ளனர். இந்த விவகாரங்களை நம்முடைய அம்மா அவர்களுடைய அரசு நிதானமாக கையாளுவதாக அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நான் அந்த உணர்வை பாராட்டுகின்றேன்; மதிக்கின்றேன். இந்த நேரத்திலே நான் ஒரு ஆலோசனையை முன் வைக்கக் கடமைபட்டிருக்கிறேன். இந்த பேரவையில்,அம்மா அவர்கள் இருந்தபோது,NEET தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க கோரி இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுக்கு அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. அதற்கு நம்முடைய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். இந்த விவகாரத்திலே தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்காமல், தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுடைய நலன் காக்கபட வேண்டுமென்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த விஷயத்தை அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். எப்படியென்று சொன்னால், இப்போதைக்கு தற்காலிகத் தீர்வாக, 2வகையான கேள்வித் தாள்களை மத்திய அரசு தயாரிக்க வேண்டும், அதாவது CBSE மாணவர்களுக்கு CBSE பாடத் திட்டத்தின்