ஒவ்வொரு சமூகத்திற்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைபாடாகும். இதை சட்டமன்றத்தில் மஜக சார்பில் நான் வலியுறுத்தி பேசியிருக்கிறேன். இந்நிலையில் இன்று வன்னிய சமுதாய மக்கள் தலைநகர் சென்னையில் வன்னிய மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய நிலையில், தமிழக அரசு அனைத்து சமூக மக்களின் புள்ளி விபரங்களை சேகரிக்கும் வகையில் சாதி வாரி இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுக்கும் வகையில் ஆணையம் அமைக்க முடிவெடுத்திருப்பதற்கு மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இந்த ஆணையம் துரிதமாக முடிவெடுத்து அனைத்து மக்களுக்கும் சமூக நீதியை நிலை நாட்ட ஆவணம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 1.12.2020
அறிக்கைகள்
விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்! மஜக பொதுச்செயலளார் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களும், விவசாயிகளின் வாழ்வுரிமைகளுக்கு எதிராக இருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதை எதிர்த்து நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தின. தமிழகத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு வார கால தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் நாடு தழுவிய அளவில் விவசாய சங்கங்கள் ஒன்று சேர்ந்து தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு தற்போது போராட்டம் நடத்தி வருவது நாடெங்கிலும் ஆதரவை பெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு இப்போராட்டத்தில் பங்கேற்று வரும் விவசாயிகளின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு, அவர்கள் கூறும் திருத்தங்களை ஏற்று, இச்சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 1.12.2020
மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் விதிவிலக்கு வேண்டும்! நெல்லை மஜக அலுவலகத்தை திறந்துவைத்து பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி!
நவம்பர் 18 இன்று நெல்லை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வண்ணாரப்பேட்டை பகுதியில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். மாவட்ட செயலளார் நிஜாம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அலுவலக திறப்புக்கு பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பொதுச் செயலாளர் பேசினார். அப்போது கூறியதாவது... மருத்துவ மேற்படிப்பில் மத்திய அரசின் ஜிப்மர் , எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் நுழைவுத் தேர்வுகளை தனியாக நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. அனைத்து மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வுதான் எனக் கூறிய மத்திய அரசு இப்போது இவ்வாறு கூறியிருப்பது விநோதமாக இருக்கிறது. எனவே தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புக்கு விதிவிலக்கை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். கேந்திரிய வித்யாலயாவில் தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கி செம்மொழிக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை உச்ச நீதிமன்ற கருத்தின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மனோன்மணியம்
ஹஜ் பயணிகளுக்கு சென்னையிலிருந்தே நேரடி விமான சேவை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கடிதம்!
தமிழக முதல்வர் அவர்களுக்கு ஹஜ் விமான பயண சேவை தொடர்பாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது... தமிழகத்தை சேர்ந்த புனித ஹஜ் பயணிகள் கொச்சின் வழியாக விமானப் பயணம் செய்ய வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது. இந்தியாவில் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். மேலும் தென்னிந்தியாவின் முக்கிய நகரமாகவும் சென்னை திகழ்கிறது. இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் வகையில் இவ்வாறு முடிவெடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே இது தமிழகத்தை சேர்ந்த புனித ஹஜ் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், தாங்கள் இதில் கவனமெடுத்து, வழக்கம் போல் சென்னையிலிருந்து ஹஜ் விமானம் புறப்பட மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஹஜ் பயணிகள் வருமான வரி கட்ட வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசு ரத்து செய்யவும் தாங்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் இதற்கு தாங்கள் உரிய முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாவும் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 16-11-2020
நெய்வேலி காவல் நிலையத்தில் செல்வமுருகன் அடித்து கொலை! காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கடலூர் மாவட்டம் காடாம்புலியூரில் முந்திரி வணிகம் செய்து வந்த செல்வமுருகன் என்ற வணிகர் நெய்வேலி காவல் நிலையத்தில் காவலர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருப்பதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அவர், அக்டோபர் 30 முதல் நெய்வேலி காவல் நிலையத்தில் சித்ரவதை சம்பவங்களை அனுபவித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2 அன்று அவரது மனைவி பிரேமா மற்றும் பிள்ளைகள் முன்பு அவர் காவலர்களால் கைத்தாங்கலாக அழைத்து வந்து காட்டப்பட்டிருக்கிறார். பிறகு நவம்பர் 4 அன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக அவரது மனைவியிடம் காவலர்கள் கூறியுள்ளனர். ஒருவர் மீது குற்றம் இருப்பின் அவரை சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல், மனித உரிமை மீறல்களுடன், அவரை காவலர்களே அடித்து கொல்வது என்பது சட்ட விரோத செயலாகும். இது தொடர்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அவரது உடலை குடும்பத்தினர் முன்பு வீடியோ பதிவுடன் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று எழுப்பப்படும் கோரிக்கை நியாயமானது. மேலும் காவல்துறையின் ஒழுங்குகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் அத்துமீறிய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவிட வேண்டுமென, தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 07.11.2020