(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை! ) முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால் அவருக்கு 3 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கும் மசேதாவை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பதை வண்மையாக கண்டிக்கின்றோம். இதை ஒரு குற்றவியல் வழக்காக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முஸ்லீம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளில் தலையிடுவதாகும். இவ்விசயத்தில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தை கலந்து ஆலோசிக்காமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்க கூடாது என வலியுருத்தியதையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை . முத்தலாக் விசயத்தில் முஸ்லீம் பெண்களின் உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்படும் வகையில் அதை கையாள்வோம் என்று ஜமாத்துகளும், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் சொல்லிய பிறகும் மத்திய அரசு இவ்விசயத்தில் பிடிவாதம் பிடிப்பபதை ஏற்க முடியாது. மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பபெற வேண்டும். அல்லது அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தோடு கலந்து ஆலோசித்து உரிய திருத்தங்களோடு கொண்டுவரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அன்வர் ராஜா, AIIM தலைவர் அசாதுதீன் உவைசி, ராஸ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் JPN யாதவ், முஸ்லிம்லீக்கை
அறிக்கைகள்
முத்தலாக் வரைவு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..!!
திருவாரூர்.டிச.28., இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறியாதவது. முத்தலாக் குறித்து மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வரைவுதிட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திரும்ப பெற வேண்டும். இது குறித்து அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து பேச வேண்டும். தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதசார்பற்ற கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்புக்கொண்டு தான் பேசி வருவதாகவும் கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம்
ஜெருசலேம் பாலஸ்தீனியர்களுகே உரிமை!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், யூதர்கள் ஆகிய மூன்று சமூகத்தினரின் புனிதப் பகுதியாக கருதப்படும் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலை நகராக இருக்க வேண்டும் என்ற வரலாற்று போராட்டம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மோசமான முடிவால் ஒரு திருப்புமுனையை சந்தித்திருக்கிறது. இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் டெல் அவிவ் இனி மாநகராக மட்டுமே இருக்கும். இஸ்ரேலின் தலைநகராக இனி ஜெருசலேம் தான் இருக்கும் என ட்ரம்ப் முட்டாள் தனமாக செய்திருக்கும் அறிவிப்பு உலகை பற்றியெறிய செய்திருக்கிறது. அமெரிக்க தேர்தலின் போது யூதர்களின் வாக்குகளை பெற அவர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருக்கிறார். இதனால் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்களும், கிருஸ்தவர்களும் யூத சியோனிஸ கொள்கை அரசியலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுகிறார்கள். வாடிகன் போப் பிரான்ஸிஸ் ஜான்பால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், இப்பிரச்சனையை இதற்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது என எச்சரிக்கின்றார். ஜெருசலேம் விவகாரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறும் போது இதனால் மத்திய கிழக்கின் அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும் என்றிருக்கிறார். அதுபோல ரஷ்யா, வடகொரியா, சவுதி, ஜெர்மனி, பிரான்ஸ், சீனா,
ராகுல் காந்திக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி வெளியிடும் வாழ்த்து செய்தி) அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உட்கட்சி ஜனநாயகத்தை பேணிகாக்கும் வகையில் இன்று அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது நாடு முழுக்க கொண்டாடப்படுகிறது. நேரு காலம் தொடங்கி நாடு போற்றும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அவர் தலைமையேற்றிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு அம்சமாகும். மதவாத சக்திகளை வீழ்த்தி, சமூக நீதியை காத்திடவும், நாடு இன்று சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளிலிருந்து நாட்டை மீட்கவும், வலிமை வாய்ந்த தலைவராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவர் காங்கிரஸ் பேரியக்கத்தை வழிநடத்துவதோடு மட்டுமின்றி, நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம். அவரை ஏகமனதாக தேர்ந்தெடுத்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், #M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 12.12.17
நாகை மாவட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும்! மஜக வலியுறுத்தல்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை) நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் நம்பியார் நகர் கிராமங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்திருப்பது மீனவ மக்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் பேசி அவர்களை விடுதலை செய்ய துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 18.11.17