குவைத் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணை செயலாளராக சகோ. இலங்கை மன்சூர் அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #மனிதநேய_கலாச்சார_பேரவை #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #IKP_குவைத்_மண்டலம் 55278478 - 60338005 - 65510446.
IKP – இஸ்லாமிய கலாச்சார பேரவை
தம்மாம் மண்டல IKPயின் புதிய கிளை உதயம்…!
தம்மாம்.நவ.13., கடந்த வெள்ளிகிழமை 10/11/2017 அன்று தம்மாம், மீனா பகுதியில் உள்ள குளோப் மெரின் கம்பெனி கேம்பில் இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) தம்மாம் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி, பொருளாளர் ஹஜ் முஹம்மது, துணை செயலாளர் ஆவூர் ஜாகிர் உசேன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. இந்த கூட்டத்தில் அல் மீனா குளோப் மெரின் புதிய கிளை தொடங்க பட்டது. கிளை நிர்வாகிகள் கீழ் கண்டவாறு ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டார்கள். 1) கிளை செயலாளர் : Y.சாகுல் ஹமீது அவர்கள் (கோட்டைபட்டிணம்). 2) பொருளாளர் : K. முஹம்மது மைதீன் அவர்கள் (தஞ்சாவூர்). 3) துணை செயலாளர்: முஹம்மது நிஜாம் அவர்கள் (தென்காசி). 4) துணை செயலாளர் : முஹம்மது ஹனீப் அவர்கள் (மேலப்பாளையம்). 5) துணை செயலாளர் : K. தமிமுன் அன்சாரி அவர்கள் (மேலப்பாளையம்) 6) துணை செயலாளர் : K. முஹம்மது சித்திக் அவர்கள் (தஞ்சாவூர்). புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு மண்டல செயலாளர் மற்றும் மண்டல நிர்வாகிகள் வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். நிகழ்வுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. #தகவல்; #IKP_தம்மாம்_மண்டல_ஊடக_பிரிவு #IKP_IT_WING 12/11/2017
IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு..!
வேலூர்.நவ.05., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக இன்று (05.11.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி உரையாக மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல்: #IKP_ஊடகபிரிவு #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 05.11.2017
பஹ்ரைனில் எழுச்சியோடு நடைபெற்ற சமூகநீதி மாநாடு!
பஹ்ரைன்.நவ.04., பஹ்ரைனில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)வின் வெளிநாட்டு பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP)யின் சார்பில் சமூகநீதி மாநாடு பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. தந்தைப்பெரியார் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, அதில் நடைபெற்ற மாநாட்டில் SDPI, திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அகதிகளாக புறப்பட்டு கடலில் உயிர்துறந்த ரோஹிங்ய மக்களுக்காக 1 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று ஆறுதல் மவுனம் செலுத்தினர். பொதுச்செயலாளருக்கு பஹ்ரைன் வாழ் தமிழ் உணர்வாளர்களும், திராவிட இயக்கவாதிகளும் பொன்னாடை போர்த்தினர். நிகழ்வின் இறுதியாக பொதுமக்களின் கேள்விகளுக்கு பொதுச்செயலாளர் அவர்கள் சிறப்பாக பதிலளித்தார்கள். இது ஒரு அரசியல் வகுப்பு போல அமைந்தது. இதை பலரும் பாராட்டி வரவேற்றனர். இலக்கியம், பொழுதுபோக்கு அல்லாது பஹ்ரைனில் அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டங்களில் இதுதான் பெரிது என அனைவரும் ஒன்றுபட கூறினர். வளைகுடா நாடுகளில் மிகவும் சிறிய நாடான பஹ்ரைனில் தமிழர்கள் நிறைவாகவே உள்ளனர். இந் நிலையில் அரங்கம் நிறைந்து கூடுதல் நாற்காலிகளும் போடப்பட்டு வெளியிலும் கூட்டம் நின்றிருந்தது. ஆண்கள், பெண்கள் என 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதும்,
IKP சார்பில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம்..!
வேலூர்.அக்.16., வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக நேற்று (15.10.17) R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை IKP முன்னாள் மாநகர செயலாளர் மௌலவி S.S.அகில் ரஷாதி அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பயிற்சி உரையாக A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் S.முஹம்மத் ஜாபர் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல்: #IKP_ஊடகபிரிவு #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 15.10.2017