மே.11., மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கும் புதிய மின்சார சட்டத் திருத்தம் ஆபத்தானது மட்டுமல்ல, அது மாநில அரசுகளின் உரிமைகளையும் பறிக்கும் செயல் என்பதால், அதை உறுதியாக நீங்கள் எதிர்க்க வேண்டும் என மாண்புமிகு. மின்துறை அமைச்சர் திரு.தங்கமணி அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு வேண்டுகோள் விடுத்தார். விவசாய வளர்ச்சிக்கு துணை நிற்கும் இலவச மின்சாரம் பறிபோனால், அது விவசாயிகள் உள்ளிட்ட சகலரையும் பாதிக்கும் என்பதால் இதில் சமரசம் கூடாது என்றார். இது குறித்து தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மக்களின் எண்ணங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 11-05-2020
கொரோனா வைரஸ்
நோன்பு நோற்ற நிலையில் மஜக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இரத்ததானம்!
மே 9, ஊரடங்கு தருணம் என்பதாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் அரசு இரத்த வங்கியில் யாரும் இரத்த தானம் செய்ய முன்வராத நிலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையைப் போக்க இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து குருதிக் கொடையாளர்களையும் அழைத்து அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹூசைன் தலைமையில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஐந்து நபர்கள் கலந்துக் கொண்டு இரத்த தானம் செய்தனர். மஜக நிர்வாகிகள் அனைவரும் ரமலான் நோன்பு நோற்றிருந்த நிலையில் இரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு மருத்துவர்களும், சக குருதி கொடையாளர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_மாவட்டம்.
நமது உரிமைகள் பறிக்கப்படுவது குறித்து தமிழர்கள் சிந்திக்கவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA உரை!
அம்பேத்கார், பெரியார், மார்க்ஸ் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இணைய தள கருத்தரங்கில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் 'உரிமைக் குரல்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் தமிழகம் மற்றும் கடல் கடந்து உலகம் முழுக்க வாழும் தமிழர்களும் காணொளி வழியில் இணைந்தனர். ஊரடங்கின் 45 வது நாளை முன்னிட்டு, ஒரு மணி நேர உரையும், ஒரு மணி நேர கேள்வி-பதிலுமாக இந்நிகழ்வு உற்சாகமாக அமைந்தது. இதில் அவர் பேசியதின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு.. https://m.facebook.com/story.php?story_fbid=2452385958194498&id=700424783390633 உணர்வாளர்கள், சித்தாந்தவாதிகள் இணைந்திருக்கும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலகம் இதுவரை சந்தித்திடாத ஒரு நெருக்கடியை நமது காலத்தில் சந்திக்கிறோம். இதற்கு முன்பு உலகில் இது போன்ற கொள்ளை நோய்கள் பரவியதுண்டு.பேரழிவுகளை சந்தித்ததும் உண்டு. அவை ஒரு தீவு, ஒரு நாடு, ஒரு கண்டம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கொரணா தொற்றுதான் ஒரே நேரத்தில் உலகையே ஊரடங்கில் வைத்திருக்கிறது. மனித வரலாற்றில் இப்படியொரு நெருக்கடியை இப்போதுதான் எதிர்கொள்கிறோம். இது இயற்கையான நோயா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுத நோயா? என்ற ஐயங்களும் இருக்கிறது. எப்போது இது முடிவுக்கு வரும் என்ற
டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!
கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனை தமிழக மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர். இன்று இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வேதனையளிக்கிறது. அரசின் இம்முயற்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக மக்களின் நலன் கருதி இம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 09.05.2020
மஜக நாமக்கல் மாவட்டம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்!!
நாமக்கல்:மே.07., கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி நாமக்கல் மாவட்டம் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சுமார் 850பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் அகமது கபீர், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொருட்களை வழங்கினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாமக்கல்_மாவட்டம் 03.05.2020