
மே.01.,
இன்று உழைப்பாளர் தினமான மே 1 தினத்தை முன்னிட்டு மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) சார்பில் மஜக தலைமையக வாசலில் கொடியேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து MJTS சார்பில் மோர், தர்பூசனி ஆகியவற்றின் வினியோகத்தை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து காய்கறி பிரியாணி வினியோகத்தை மஜக பொதுச் செயலாளர் மெளலா நாசர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து MJTS மாநில துணைச் செயலாளர் மாத்தூர் இப்ராகிம் தலைமையில் MJTS நிர்வாகிகள் பேருந்து, ஆட்டோ, பைக் ஆகியவற்றில் பயணித்தவர்களுக்கு வாகனங்களை நிறுத்தி தர்பூசணி, மோர் ஆகியவற்றை வினியோகித்தனர்.
கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு MJTS செய்த இச்சேவை பெரிதும் மகிழ்ச்சியளித்தது.
சுமார் ஒரு மணி நேரமாக வினியோக பணிகள் நடைபெற்றது.
இதில் MJTS மாவட்ட செயலாளர்கள், ரமேஷ் குமார், பிராங்கிளின், அல்லாபகஷ், வெங்கடேசன், சுலைமான், சங்கர், MJTS மாவட்ட பொருளாளர்கள் இளங்கோவன், இதாயத்துல்லா, MJTS துணைச் செயலாளர்கள் முகமது அலி ஜின்னா, ராஜேஷ், சுல்தான் மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
01.05.2024.