டாஸ்மாக் மேல் முறையீட்டை தமிழக அரசு கை விடவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக இடைவெளி மற்றும் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனை தமிழக மக்கள் வரவேற்று மகிழ்ந்தனர்.

இன்று இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது வேதனையளிக்கிறது.

அரசின் இம்முயற்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக மக்களின் நலன் கருதி இம்முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,

பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.

09.05.2020

Top