ஏப்ரல்.01., கொரோனாவை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விநியோகித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட மஜக-வினர் கடந்த ஒரு வாரமாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று செங்கம் மில்லத் நகர் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ள ஏழ்மையான குடும்பத்தினருக்கு, தலா 1000 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்னெய், காய்கறிகள் என வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகரச் செயலாளர் ஜே.ஜே.ஜாகீர், நகரப் பொருளாளர் மெடிக்கல் முஸ்தபா, நகர துணைச் செயலாளர் காலு என்கின்ற லியாகத் ஆகியோர் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவண்ணாமலை_மாவட்டம் 01-04-2020
கொரோனா வைரஸ்
டெல்லி சென்றவர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
இத்தருணத்தில்வெறுப்புஅரசியலைதூண்டுவதுகண்டிக்கத்தக்கது! ஆன்மிக பணிக்காக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினர் வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களில் தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். பலர் அந்தந்த ஊர் ஜமாத்தினர், குடும்பத்தினரின் ஆலோசனையின் படி, அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். இதையும் கடந்து யாரேனும் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். நாட்டின் சூழல்,பொது மக்களின் உயிர் பாதுகாப்பு, தங்கள் குடும்பத்தினர் நலம் ஆகியவை இதில் அடங்கியிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக் காட்டுகிறோம். https://m.facebook.com/story.php?story_fbid=2367172930049135&id=700424783390633 அதே சமயம், பொது சமூகத்திற்கு சில விசயங்களை விளக்க கடமைப்பட்டுள்ளோம். அதில் முதலாவது இவ்விசயத்தில் வரம்பு மீறிய விமர்சனங்களை சிலர் பரப்புவது நியாமற்றது என்பதாகும். தப்லீக் ஜமாத் என்பது அரசியல், சமுதாய சேவை ஆகியவற்றில் ஆர்வம் காட்டாத ஒரு ஆன்மீக அமைப்பாகும். அவர்கள் "ஐந்து வேளை இறைவனை தொழ வேண்டும்." என்ற ஒற்றை கொள்கையை முஸ்லிம்களிடம் மட்டும் பரப்புரை செய்பவர்கள். வேறு எதையும் இவர்கள் செய்வதில்லை என்பதும், சொந்த பணத்தில் இவர்கள்
கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கபசுர குடிநீர்! மஜக சார்பில்விநியோகம்!
ஏப்.01, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருமருகல் ஒன்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து முதற்கட்டமாக ஏனங்குடி கடை தெரு, ஊராட்சி மன்ற அலுவலகம், மாதிரி மங்கலம் கூட்டுறவு அங்காடி, ஆதலையூர், கரைப்பாக்கம், N.S நகர், கேதாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக நேரில் சென்று கபசுர குடிநீரை மஜகவினர் விநியோகம் செய்தனர். இக்குடிநீரானது, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகாக நோய் தாக்காத நபர்கள் கபசுர குடிநீரை பயன்படுத்திட தமிழக அரசின் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுரையை ஏற்று அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் இக்குடிநீர் மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. 144 ஊரடங்கு தடையுத்தரவு அமுலில் உள்ளதாலும், கோரோனா நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாகவும் இப்பணியில் ஈடுப்பட்ட மஜகவினர் முககவசம், கையுரை அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறு,சிறு குழுவாக பிரிந்து சென்று இவ்விநியோகப்பணிகளை மேற்கொண்டதற்கு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் உள்ளிட்ட அரசு சுகாதார அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இதில் மஜக நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப், பேபி ஷாப் பகுருதீன், IT WING மாவட்ட துணைச் செயலாளர் நிசாத்,
கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய மஜகவினர்!!
கோவை: ஏப். 01., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது. பழங்களை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், மற்றும் பொதுமக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 01.04.2020