கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கபசுர குடிநீர்! மஜக சார்பில்விநியோகம்!

ஏப்.01,
நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருமருகல் ஒன்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து முதற்கட்டமாக ஏனங்குடி கடை தெரு, ஊராட்சி மன்ற அலுவலகம், மாதிரி மங்கலம் கூட்டுறவு அங்காடி, ஆதலையூர், கரைப்பாக்கம், N.S நகர், கேதாரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக நேரில் சென்று கபசுர குடிநீரை மஜகவினர் விநியோகம் செய்தனர்.

இக்குடிநீரானது, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகாக நோய் தாக்காத நபர்கள் கபசுர குடிநீரை பயன்படுத்திட தமிழக அரசின் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுரையை ஏற்று அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் இக்குடிநீர் மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

144 ஊரடங்கு தடையுத்தரவு அமுலில் உள்ளதாலும், கோரோனா நோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாகவும் இப்பணியில் ஈடுப்பட்ட மஜகவினர் முககவசம், கையுரை அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறு,சிறு குழுவாக பிரிந்து சென்று இவ்விநியோகப்பணிகளை மேற்கொண்டதற்கு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் உள்ளிட்ட அரசு சுகாதார அலுவலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதில் மஜக நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப், பேபி ஷாப் பகுருதீன், IT WING மாவட்ட துணைச் செயலாளர் நிசாத், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், துணை செயலாளர் ஆசிப், ஏனங்குடி, ஆதலையூர், கேதாரிமங்கலம் நிர்வாகிகள் பாவா, முத்து, யாசின், மாலிக், ஜாஹிர், பயாஸ், அப்சல், சாகுல், முத்து மரைக்கான், சிராஜ், சுல்தான், ஜாசிம், சமிம், ரஹ்மான், நபிஸ், இமாம், பைசல், ரஹ்மான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA., கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சித்த மருத்துவர்களின் பரிந்துரையை கேட்க வேண்டும் என சுகாதார துறைக்கு சட்டமன்றத்திலேயே வேண்டுகோள் வைத்ததும், இப்பகுதிகள் நாகை சட்டமன்ற தொகுதிக்குள் வருவதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.