தென்காசி: ஏப்ரல். 03., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் அச்சன்புதூர் பகுதிகளில் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு மாஸ்க் (முக கவசம்) வழங்கப்பட்டது. மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து பொது மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.. மஜக-வினரின் இப்பணியை பொதுமக்கள், பெரிதும் பாராட்டினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம். 03.04.2020
கொரோனா வைரஸ்
கோரிக்கையை ஏற்று அங்காடியை வளாகத்தை சுத்தம் செய்துதந்த மஜக
ஏப்.03, நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சக்கொல்லை ஊராட்சியில் அங்காடி ஊழியர்கள் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வைத்த கோரிக்கையை ஏற்று கிராம கூட்டுறவு அங்காடி வளாகம் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது. மஞ்சக்கொல்லை ஊராட்சி அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மஜகவினரிடம் அங்காடியில் ஏப்ரல் மாத அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதால் அதன் அருகில் மண்டிக்கிடக்கும் கருவேலமுட் புதர்களை அகற்றி மக்கள் போதிய இடைவெளியில் நிற்பதற்கு உதவிடுமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், சுற்றி இருந்த முட்புதர்கள் மஜகவினரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்காடி அறிவிப்பு பலகையில் மஜகவிற்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களை அங்காடி ஊழியர்கள் எழுதி நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விநியோகிக்கும் திருவண்ணாமலை மாவட்ட மஜகவினர்
ஏப்ரல்.03., ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்ட மஜக-வினர் கடந்த 10 நாட்களாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று செங்கம் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ள ஏழ்மையான குடும்பத்தினருக்கு, தலா 1000 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்னெய், காய்கறிகள் என வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் பாபு, நகரச் செயலாளர் ஜே.ஜே.ஜாகீர், நகரப் பொருளாளர் மெடிக்கல் முஸ்தபா, நகர துணைச் செயலாளர் காலு என்கின்ற லியாகத் ஆகியோர் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவண்ணாமலை_மாவட்டம் 03-04-2020
அகஸ்தியா சித்த மருத்துவமனையுடன் இணைந்து கபசுரகுடிநீர் வழங்கிய மஜக!
ஏப்.03, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரம் 16 வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மஜகவினரால் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது. இக்குடிநீரானது சளி, இருமல் உள்ளிட்டவைகளை சீர் செய்வதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடியது என்பதால் மக்கள் ஆர்வமுடன் பெற்று அருந்தினர். இதற்கான ஏற்பாடுகளை அகஸ்தியா சித்த மருத்துவமனையுடன் இணைந்து திருக்கோவிலூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறப்பாக செய்திருந்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம். 02.04.2020
ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியோர்க்கு உணவளித்த மஜகவினர்.!
வேலூர்.ஏப்.,02 கொரோனாவை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர், இதைத் தொடர்ந்து அடித்தட்டு ஏழை மக்கள், சாலையோரம் வசிப்போர் உணவின்றி தவிக்கக்கூடாது எனும் நல்லெண்ணத்தோடு, ஏழை எளியோருக்கு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வேலூர் மாநகர் சார்பில் மஜக-வினர் பிகார் மாநிலத்திலிருந்து வந்து பணிபுரியும் தினக்கூலியினர், ஆதரவற்றோர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 02-04-2020