ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜக வினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூட விருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பு மாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னத்துரை, MLA., அவர்களை மஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து கையளித்தனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 03.01.2022
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
அரியலூர் மாவட்டத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் நேரில் ஆய்வு!
கோவை மத்திய சிறை முற்றுகை போராட்ட பணிகள் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை ஜெயம்கொண்டத்தில் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து பணிகளை கேட்டறிந்தார். பிறகு கோவை சிறை முற்றுகை போராட்டத்தின் விளம்பர பணிகள் மற்றும் மக்களை திரட்டும் பணிகள் பற்றி கேட்டறிந்து ஆலோசணைகள் வழங்கி முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டார். பிறகு ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து போராட்ட அழைப்புவிடுத்தார். இம்மாவட்டத்தில் பரவலாக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. அதிகமானோரை திரட்ட இம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளர் அக்பர், மாவட்ட பொருளாளர் B.சர்புதீன் மாவட்ட துனை செயலாளர்கள் E.முகம்மது அலி, M.சேக் இஸ்மாயில், MJTS மாவட்ட செயலாளர் M.செய்யது பாரூக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் K.யாஹிம் கான் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #அரியலூர்_மாவட்டம் 03.01.2022
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் கிருஸ்துமஸ் வாழ்த்து செய்தி…
அன்புக்குரிய கிருஸ்தவ பெருமக்கள் கொண்டாடி மகிழும் பண்டிகைகளுள் முதன்மையானது கிருஸ்துமஸ் பண்டிகை. அறத் தொண்டுகள் மூலம் உலக மக்களின் இதயங்களை வென்றிருக்கும் கிருஸ்தவ சகோதர, சகோதரிகள் இப் பண்டிகையில் புத்தெழுச்சியோடு ஒன்று கூடி மகிழ்கிறார்கள். நம் இந்திய திருநாட்டில் கல்வி நிறுவனங்கள், அனாதை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் சேவகங்கள், மருத்துவ மனைகள் என அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் சேவை தளங்கள் நம் அனைவரின் அன்றாட வாழ்வோடு பிணைந்திருக்கிறது. அது தான் சமூக நல்லிணக்கம் வலிமை பெறவும், சமூகநீதி செழிக்கவும் துணை நிற்கிறது. அதை நாட்டு மக்கள் எண்ணி மகிழ்கிறார்கள். நன்றி பாராட்டுகிறார்கள். இத்தருணத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழும் அன்புக்குரிய கிருஸ்தவ உறவுகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உலகில் அமைதியும், வளமும் பெருக இந்நாளில் உறுதியேற்போம். இவண், மு.தமிமுன் அன்சாரி, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24.12.2021
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
திருவொற்றியூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.சங்கர் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன், தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்நிகழ்வில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பசீர் அகமது, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், மாவட்ட துணைச் செயலாளர் நிஜாம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஷாஹின்ஷா, ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 20.12.2021
கடலூர் வடக்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து அலோசிக்க மஜக கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நெய்வேலியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பளருமான நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டார். இதில் போராட்டம் குறித்து மாவட்டம் முழுவதும் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்களை துரிதமாக வரைவது என இலக்கு நிர்ணயித்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 5 பஸ் உட்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மத், மாவட்ட துணைச்செயலாளர்கள் அஜ்மீர் கான், பண்ருட்டி யாசின், மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 19.12.2021