அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நகர செயலாளர் செல்லராஜா (எ) பீர் முகமது, தன்ஸிலா பானு திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று 12.11.2021 வெள்ளிக்கிழமை காரைக்குடியில் நடைபெற்றது. இத்திருமண வரவேற்பில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர் அதிரை ராஜா, நகர செயலாளர் அப்துல் சமது, நகர து.செயளாலர் அஸ்கர், நகர மருத்துவ அணி செயலாளர் பயாஸ் அகமது, மாணவர் இந்தியா செயலாளர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 12.11.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
தாம்பரம் அனாங்காபுத்தூர் பல்லாவரம் ஆகிய பகுதிகளில்… வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் விநியோகித்த மஜகவினர்..!
கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் கன மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கப்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய கிட் தாம்பரம், பல்லாவரம், அனங்காப்புத்தூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட செயலாளர் ஜாகிர் தலைமையில் மஜகவினர் விநியோகித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் தில்சாத், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது, அனகை நகர செயலாளர் சாதிக், பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ், அனகை நகர பொருளாளர் இஸ்மாயில், பல்லாவரம் நகர துணை செயலாளர் அக்பர் அலி மற்றும் ஜெகதீஷ், மோகன், ஷாம், கார்த்திக், மணிகண்டன், சாகுல் ஹமீது, நாகராஜ், விக்னேஷ், விஜி, முத்து, சதீஷ் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் நிகழ்வில் நிவாரண பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு 12.11.2021
பெரம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு விநியோகித்த மஜகவினர்..!
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதில் மாவட்டப்பொருளாளர் முகம்மது அக்பர், வர்த்தகர் அணி செயலாளர் அப்துல் ரஷீத் மற்றும் 34, 35 ஆகிய வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் உணவு பொட்டலங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 11.11.2021
கோவையில் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் சாலையை சீரமைத்த மஜகவினர்!
கோவை ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில். மழையும் விடாமல் பெய்து வந்ததால் அந்த சாலைகள் மேலும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், AE ஆகியோர் உதவியுடன் மஜக நிர்வாகிகள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்தனர். இப்பணியில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் லேனா இசாக், மருத்துவ அணி மாநில துணைச்செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், சிராஜுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING, #கோவை_மாநகர்_மாவட்டம் 08.11.2021
வடசென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரசாக் அவர்களின் இல்ல திருமண விழா புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் S.முகமது ஆஷக் & A.முபினா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இத்திருமண விழாவில் மஜக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, SDPI மாநில செயலாளர் A.K.அப்துல் கரீம், ஓட்டேரி ஜமாத் தலைவர் , இளைஞரணி மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன், துறைமுகம் சிக்கந்தர், அஸ்கர், அம்ஜத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மேற்கு_மாவட்டம் 08.11.2021