You are here

பெரம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு விநியோகித்த மஜகவினர்..!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இதில் மாவட்டப்பொருளாளர் முகம்மது அக்பர், வர்த்தகர் அணி செயலாளர் அப்துல் ரஷீத் மற்றும் 34, 35 ஆகிய வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் உணவு பொட்டலங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
11.11.2021

Top