மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க கன்னியாகுமரி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான காயல் சாகுல் ஹமீது பங்கேற்றார். கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், இளைஞரணி மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், பொருளாளர் ஐயப்பன், இளைஞரணி மாநகர பொருளாளர் வேல்முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 11.12.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
அய்யம்பேட்டை அறிவகம் நூலகம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை”
டிசம்பர்:08., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் புகழ் பெற்ற அறிவகம் (தாருல் ஹிக்மா) விற்கு மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று வருகை தந்தார். அவரை அதன் நிறுவனர் ஹாஜி ஜபருல்லாஹ் அவர்கள் வரவேற்று சிறப்பித்தார். தமிழகத்தின் தலைச்சிறந்த அறிவு களஞ்சியங்களில் ஒன்றான இதன் செயல்பாடுகள் பல முன்மாதிரிகளை கொண்டது என அவர்களது பணிகளுக்கு பாராட்டுகளை கூறினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மஜக சார்பு அமைப்பான MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மருத்துவ சேவை அணியின் மாநில துணைச் செயலாளர் மஹ்ரூப், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா , பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் பொதுச் செயலாளர் அவர்கள் மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முஹம்மது மஃரூப் அவர்களின் தகப்பனார் உடல் நலம் விசாரிக்க அவர்கள் வீட்டிற்கு வருகை தந்து ஆறுதல் கூறி விட்டு புறப்பட்டார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 08.12.2021
ஜனவரி.08 கோவை சிறைச்சாலை முற்றுகை! மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு!
டிசம்பர்.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் இன்று தஞ்சையில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு திட்டமிடல்கள் வகுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில், தமிழகம் முழுவதும் உள்ள ஆயுள் தண்டனை சிறைக் கைதிகளை பொதுமன்னிப்பில் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் ஜனவரி 08.2022 அன்று கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் தேசிய பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூகநீதி ஆளுமைகள் என முன்னிலை ஏற்று ஆயிரக்கணக்கானோர் களம் காண்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. (இதர தீர்மானங்கள் மற்றும் செய்திகள் பின்னர் வெளியிடப்படும்) தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மஜக_தலைமையகம். 07.12.2021
வேடந்தாங்கள் பறவைகளுக்கும், வேடம் தாங்கும் பறவைகளுக்கும் இங்கு இடமில்லை! நீடூர் – நெய்வாசல் மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்வில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
நீடூர்.டிச.06., மயிலாடுதுறை மாவட்டம் நீடுர் - நெய்வாசலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 12 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் N.M. மாலிக் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மழையை முன்னிட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிலையில், திரளான உள்ளுர் மக்கள் பங்கேற்று தங்கள் பேராதரவை மஜகவுக்கு வழங்கினர். இதில் தொடக்கவுரையாற்றிய நீடுர் JMH அரபிக் கல்லூரி முதல்வர் மெளலவி இஸ்மாயில் பாஜில் பாகவி அவர்கள் பேசும் போது, மஜகவின் பணிகளை சிலாகித்து பேசினார். மாநிலச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் கோவை சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி சிறப்பாக பேசினார். பிரபல பாடகர் தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள்' மலையாள கரைதனிலே ரத்தாற்று ஒட்டம்' என்ற நாகூர் அனிபா வின் பாடலை பாடி அரங்கில் விடுதலை எழுச்சியை மீட்டுறுவாக்கம் செய்து கைத்தட்டலை பெற்று சென்றார். வாழ்த்துரை வழங்கிய முன்னாள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரான பால அருட்செல்வன் பேசும் போது, பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் சட்டமன்ற பணிகளையும், சமூக நல்லிணக்க பணிகனையும் சிலாகித்து பேசினார். இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும் போது, மஜக சமாதான பறவைகளின் கூடாரம் என்றும், இங்கு சீசனுக்கு வந்து போகும்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!! குடியாத்தம் மஜக சார்பில் ஆலோசனை கூட்டம்!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் இதில் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் குறைந்தபட்சம் 4 இடங்களில் போட்டியிடுவது என மனிதநேய ஜனநாயக கட்சி முனைப்போடு உள்ளது. தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மஜக நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், எந்தந்த வார்டுகளில் போட்டியிடுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நீஜாமுத்தின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், நகர து.செயலாளர் கவுஸ் பாஷா, மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக், முஹம்மத் உசேன், நகர இளைஞர் அணி செயலாளர் அல்தாப், மாணவர் இந்தியா ஜீஷான் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 05.12.2021