ஜனவரி_08 கோவை முற்றுகை போராட்டம்! கன்னியாகுமரி மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்..!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது.

போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க கன்னியாகுமரி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான காயல் சாகுல் ஹமீது பங்கேற்றார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர்கான், இளைஞரணி மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹின் இப்ராஹிம், பொருளாளர் ஐயப்பன், இளைஞரணி மாநகர பொருளாளர் வேல்முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
11.12.2021