மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது.
போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு நீலகிரி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
12.12.2021