ஈரோடு.ஜன.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (10.01.18) நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா தலைமையிலும், மாவட்ட பொருப்புக் குழு தலைவர் ஈரோடு எக்சான், பொருப்புக் குழு உறுப்பினர்கள் நிஜாமுதீன், மார்க்கெட் நாசர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 பகுதிகளில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பகுதிசெயலாளர்: A.முஹம்மது ஹாரிஸ், பகுதிபொருளாளர்: ஆனந்த், துணைச் செயலாளர்: B.இளங்கோவன், இளைஞரணி செயலாளர்: M.அப்துல் அஜீஸ், மாணவர் இந்தியா செயலாளர்: சுஹைல் முஹமது பாஷா, தொழிற்சங்க செயலாளர் : S. அப்துல் சமது, வர்த்தக சங்க செயலாளராக: ஆறுமுகம், இஸ்லாமிய கலாச்சார பேரவை: செயலாளராக B.முபாரக் அலி, சுற்றுச் சூழல் அணி செயலாளராக: M. இர்பான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_ மாவட்டம். 10-01-2018
புதிய கிளை
நீடாமங்கலத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…!
திருவாரூர்.ஜன.03., திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் புதிய கிளை மாவட்ட செயலாளர் P.M.A.சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமையில் நேற்று முன்தினம் (01.01.2018) அன்று துவங்கபட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் T.A.லியாக்கத் அலி, பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முஹம்மது, மானவர் இந்தியா நிர்வாகி மஹாதிர், மாவட்ட சிறப்பு அழைப்பாளர் ஜெய்னுதீன் மற்றும் பல நிர்வாகிள் முன்னிலையில் புதிய கிளை துவங்கபட்டு கிளை நிர்வாகிகள் நியமிக்கபட்டார்கள். 30க்கும் அதிகமான உறுப்பினர்கள் தன்ஆர்வத்துடன் கட்சியில் தங்களை இணைத்து கொண்டார்கள். இதில் முக்கிய சிறப்பம்சமாக இந்து சகோதர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழிச்சியுடனும் தங்களை கட்சியில் உறுப்பினராக இணைத்துகொன்டார்கள். கிளை செயலாளர் : S. அஹமது முஸ்ஸெரிப் கிளை பொருளாளர் : ஜா. உமர் முக்தா கிளை துனை செயலாளர்கள் : B. அன்சாரி K. கார்த்திக் N. ஜப்பார் காதர் ஒலி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கபட்டு, கிளை இனிதே துவங்கியது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம் 01.01.2018
நெல்லை மூலக்கரைப்பட்டியில் மஜகவின் புதிய கிளை உதயம்..!
நெல்லை.டிச.31., நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகம்மது அலி இக்பால் தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன் மற்றும் சுல்தான்கனி ஆகியோர் முன்னிலையில் மூலக்ககரைப்பட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 31.12.2017 காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல்ஹமீது கலந்து கொன்டார். நிர்வாகிகள் கலந்தாலோசனைக்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. செயலாளர். J.அமீர் கான் S/O.ஜமால் அப்துல் நஷீர் (9566503545) பொருளாலர். M.அகமது மீரான். S/O முகம்மது காசிம் (7418067382) துணைச்செயலாளர்கள். 1.M.அமீர் (8056615574) 2.M.சேக் முகம்மது (8220713556) 3.N.சாகுல் ஹமீது (7373635793) தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நெல்லை_கிழக்கு_மாவட்டம்
SP.பட்டினத்தில் மஜக கிளை உதயம்…!
தொண்டி. டிச.30., இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் சீனி முகம்மது,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.M.ஹாரிஸ், மாநில செயற்குழு உறுப்பினர் MMH.முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்களின் அறிவுறுத்தளின் படி, மாவட்ட துணை செயலாளர் முகம்மது, வர்த்தகரணி செயலாளர் இப்னு சூது, மாவட்ட விவசாய அணி ராஜா ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளராக சுல்தான், பொருளாளராக முகம்மது ரபீக், துணை செயலாளர்களாக செய்யது அன்சாரி, நல்ல இப்ராஹீம் பாதுஷா ஆகியோர் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சீனி முகம்மது முன்னிலையில் ஏராளமானோர் மஜகவில் இணைந்ததனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு
கத்தார் மண்டலம் MKPயின் புதிய இரண்டு கிளை உதயம்..! தமுமுகவின் IQIC இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டு MKPயில் இணைந்தனர்..!!
தோஹா.டிச.26., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் கடந்த 24/12/2017 அன்று மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ் அவர்கள் தலைமையில் சனயா (Sanaya-39 Almillion) மற்றும் சஹானியா (Sahaniya- Almillion) ஆகிய பகுதிகளில் புதிய இரண்டு கிளைகள் உருவாக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமுமுகவின் கத்தார் மண்டல கிளை அமைப்பான IQICஇல் இருந்து விலகி இரண்டு கிளைகள் கலைக்கப்பட்டடு மனிதநேய கலாச்சாரப் பேரவையில் இணைந்தனர். இதில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மண்டலா நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் +97455734012 25.12.2017