செப்டம்பர்.07., தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது, நேற்று (07-09-2020) மஜக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் தாரிக் தலைமையில், கிளையை சேர்ந்த சதாம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மானங்காத்தான் கிளைக்கான நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் கலந்து கொண்டு புதிய கிளை உதயமானதை வரவேற்று பேசினார், மேலும் புதிய கிளையின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளான மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப் ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம் 06-09-2020
புதிய கிளை
பட்டுக்கோட்டை நகரத்தில் மஜக உதயம்.
தஞ்சை.செப்.07., தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் மனித நேய ஜனநாயக கட்சியின் கிளை அமைக்கப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி.எஸ்.எம்.எ.சலாம் தலைமையிலும், மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை, செயல்பாடு குறித்து மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணன் மதுக்கூர் கே.ராவுத்தர்ஷா அவர்கள் விளக்கி பேசினார்கள். இதில் சுமார் 25 சகோதரர்கள் உறுப்பினராக இணைந்து கொண்டனர். மேலும் இதில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை குத்துபுதீன் மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்காவலசை ராஜ் முகமது, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள், கறம்பக்குடி ஜான் முகமது, ரெங்கசாமி , அதிரை நகர பொறுப்பு குழு தலைவர் ஸமது ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை துவங்கப்பட்டது..!
தூத்துக்குடி.செப்.4., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி க்கு உட்பட்ட தெற்கு ஆத்தூரில் இன்று மனித நேய ஜனநாயக கட்சி யின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்த கிளையின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட துனை செயலாளர் முகம்மது நஜிப், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக கீழ்கன்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் S.முகம்மது சபிர் 9952265682 (கிளை செயலாளர்) வாசிம் அக்ரம் 8828571043 (கிளை பொருளாளர்) தமிம் அன்சாரி 7418712013 (துனை செயலாளர்) விரைவில் தெற்கு ஆத்தூர் கிளை சார்பாக மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது, கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்வில் காயல்பட்டினம் நகர பொருளாளர் மீரான், வடக்கு ஆத்தூர் கிளை பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம். 04-09-2018.
மஜக ஒரத்தநாடு புதிய கிளை உதயம்..!
தஞ்சை.ஜூலை.17., தஞ்சை தெற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் ஒரத்தநாடு கிளை நேற்று (16.07.2018) மாவட்ட பொறுப்பாளர் பேராவூரணி சலாம் முன்னிலையில் உதயமானது. ஒரத்தநாடு பகுதி ஒருங்கிணைப்பாளர் பஷீர் மற்றும் அஷ்ரப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்டோர் மஜகவில் இணைந்தனர். இதில் மாணவர் இந்தியா மாவட்ட அமைப்பாளர் அஸார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராஜமுகம்மது ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்
மஜக சிவகங்கை இடைக்காட்டூர் புதிய உதயம் மற்றும் கொடியேற்றும் விழா..! மாநில துணை செயலாளர் பங்கேற்பு..!!
சிவகங்கை.ஜூலை.15., சிவகங்கை மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்ட சுற்று பயணத்தில் ஒரு நிகழ்வாக மாவட்ட பொருளாளர் சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர் சதாம் உசேன் அவர்கள் முன்னிலையில் இடைக்காட்டூரில் கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் சைஃபுல்லாஹ் அவர்கள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து அனைத்து சமுதாய மக்களுடனான நட்புனர்வை பேனுவதிலும், அடித்தட்டு மக்களுக்கு உதவிசெய்வதையும், அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுப்பது பற்றியும் நிர்வாகிகளுக்கு எடுத்துக்கூறி அனைத்து சமுதாய மக்களும் ஏன் மஜகவில் இணையவேண்டும் என்பது பற்றி கட்சியின் கொள்கைகளை விளக்கி சிற்றுரையாற்றினார். மேலும் இதில் மாநில வர்த்தகர் அணிதுணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட் அவர்களும் கலந்து கொண்டார். மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்களுக்கும், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும் இடைக்காட்டூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் முகம்மது நாசர் அவர்களும், ஜாஹிர் உசேன் அவர்களும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பிறகு நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்வினை கிளை செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களும், கிளை பொருளாளர் செய்யது