தேனி. பிப்.28., தேனி மாவட்டம் கம்பம் நகர அலுவலகம் முன் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ம ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் முகம்மது ரியால், மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், தன்வீர், மாவட்ட , ஒன்றிய, நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தேனி மாவட்டம் 28.02.2017
செய்திகள்
மஜக 2ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அந்தியூர் நகர GHல் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது…
ஈரோடு. பிப்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் 2ஆம்ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்ள 70வதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிரட், ஆரஞ்ச், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அந்தியூர் நகர செயலாளர் ஷபி தலைமை தாங்கினார், நகர துணை செயலாளர்கள் B.M.அனீபா, S.இப்ராஹிம், நகர இளைஞரணி செயலாளர் இப்ராஹிம், பீடிநகர் செயலாளர் ரபியுல்லா, நிர்வாகிகள் ஹபிபுல்லா, ஷேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் A.K.ஷானவாஸ், மாவட்ட துணை செயலாளர் கவுந்தி சாகுல் அமீத், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் நஜீர் பேக் ஆகியோர் நோயாளிளுக்கு பிரட் வழங்கினார்கள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) ஈரோடு மாவட்டம். 28.02.17
நாகையில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா!
நாகை.பிப்.28., நாகப்பட்டினம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஐந்து இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் நடைப்பெற்றது. மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் தமீஜீதீன், நகர பொருளாலர் அஜீசூர் ரஹ்மான், துணை செயலாளர் அப்துல் மஜீது, வார்டு செயலாளர்கள் நாசர், சமீருதீன், இப்ராஹிம், ஜெக்கிரியா மற்றும் நவாஸ், அனஃப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING). நாகை மாவட்டம். 28.02.17
திட்டச்சேரியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
#பொதுச்செயலாளர் #தொடங்கி_வைக்கிறார்! மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறுகிறது . இம்முகாமை நாளை காலை 9:30 மணிக்கு நாகை (தெற்கு) மாவட்டம் திட்டச்சேரியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தொடங்கி வைக்கிறார் ... இவண், மஜக தலைமை தகவல் தொழில்நுட்ப அணி (MJK -IT WING)
நாகை MLAவின் தொகுதி நிகழ்ச்சிகள்…
நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி இன்று நாகை தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொகுதிப் பணிகளை மேற்கொண்டார். நாகை நகரில் #தாமரைக்குளத்தை பார்வையிட்டு அதை செப்பனிடுவது குறித்து அதிகாரிகளுடன் நேராய்வு செய்தார். பிறகு ஏனங்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர் மின் அழுத்த ட்ரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார். தொடர்ந்து திட்டச்சேரி மற்றும் நாகூருக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 25_02_17