ஈரோடு. பிப்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் 2ஆம்ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள்ள 70வதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிரட், ஆரஞ்ச், பிஸ்கட் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அந்தியூர் நகர செயலாளர் ஷபி தலைமை தாங்கினார், நகர துணை செயலாளர்கள் B.M.அனீபா, S.இப்ராஹிம், நகர இளைஞரணி செயலாளர் இப்ராஹிம், பீடிநகர் செயலாளர் ரபியுல்லா, நிர்வாகிகள் ஹபிபுல்லா, ஷேக்தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் A.K.ஷானவாஸ், மாவட்ட துணை செயலாளர் கவுந்தி சாகுல் அமீத், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் நஜீர் பேக் ஆகியோர் நோயாளிளுக்கு பிரட் வழங்கினார்கள்.
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
ஈரோடு மாவட்டம்.
28.02.17