மனிதநேய ஜனநாயக கட்சியின் #தகவல்_தொழில்நுட்ப_அணி நிர்வாகத்திற்கு ( #MJK_IT_Wing ) கீழ்கண்டவர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். #முதல்_பட்டியல் 1) கோவை மாவட்டம் : M.சம்சுதீன் கோவை - 641026 அலைபேசி/ வாட்ஸ்அப் : 9655533723 2) திருச்சி மாவட்டம் : அ.முஹம்மது அலி (சேட்) தென்னூர், திருச்சி-17 அலைபேசி/ வாட்ஸ்அப் : 8973773332 3) திருவாரூர் மாவட்டம்: M.முகம்மது அசாருதீன் பொதக்குடி, திருவாரூர் மாவட்டம், அலைபேசி / வாட்ஸ்அப் 9659168272 4) நாகை தெற்கு மாவட்டம் : A.முஹம்மது அபுபக்கர் சித்திக், திட்டச்சேரி, அலைபேசி/வாட்ஸ்அப் : 9487658305 5) திண்டுக்கல் மாவட்டம் : அனஸ் முஸ்தபா (எ)சையது முஸ்தபா, பேகம்பூர். அலைபேசி : 8838581818, வாட்ஸ்அப் 9578017786 6) நாகை வடக்கு மாவட்டம் : எம்.ஜெஹபர் அலி, நெய்வாசல், மயிலாடுதுறை தாலுக்கா, வாட்ஸ்அப்/மொபைல்: 9486991613 7) தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : R.சேக் முகம்மது ரியாஸ், கும்பகோணம். அலைபேசி/வாட்சப்:9500782587 மனிதநேய சொந்தங்கள், மேற்கண்ட நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 22.03.2017
செய்திகள்
தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஜமால் முகமது கல்லூரியில் உற்சாக வரவேற்பு…
புகழ்பெற்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், இன்று (21-3-2017) வரதட்சணைக்கு எதிராக மாணவ-மாணவிகள் நடத்திய நிகழ்ச்சியில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA கலந்து கொண்டு உற்சாக உரையாற்றினார். பறை முழக்கம், சிலம்பாட்டம் ஆகியவற்றுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. காணொளி காட்சி தொகுப்பு பிறகு "எதிரொலி" நூல் வெளியீடு புதுமையான கலை நிகழ்வோடு நடைப்பெற்றது.விரசம் இல்லாமல் நாகரீகத்தோடு மாணவிகளின் நிகழ்ச்சி அமைப்பு அரங்கேறியது. மாணவிகள் எழுந்து வரதட்சணைக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். பிறகு 1500 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மத்தியில், அவர்களின் ஆரவாரத்திற்க்கிடையே #தமிமுன்_அன்சாரி_MLA உரையாற்றினார். அவருக்கு முன்னுரை கொடுத்த பேராசிரியர்கள் அவரை பேச அழைத்த போது மாணவிகள் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர். கவிதை, இலக்கியம், தன்னம்பிக்கை, முன்னேற்றம், வரதட்சணை கொடுமைக்கு எதிரான முழக்கம், பெண்ணியம், கல்லூரி வாழ்க்கை என படு சுவாரசியமாக அவரது உரை அனைவரையும் கவர்ந்தது, கைதட்டல் அரங்கை அலற வைத்தது. பிறகு 7 மணிக்கு விடுதி மாணவர்களுக்கு மத்தியில், #தமிமுன்_அன்சாரி_MLA பேருரையை நிகழ்த்தினார். அவரை இன்றைய இளைஞர்களின் எழுச்சி நாயகர் என்று மாணவர்கள் அறிமுகப்படுத்தி பேச அழைத்த போது மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று அதன் சுவையை அனுபவப்பூர்வமாக விவாரித்த போது மாணவர்கள் உற்சாகம்
புதுகை மாவட்ட தமுமுக,மமக செயலாளர்கள் மஜகவில் இணைந்தனர்…
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மமக துணை செயலாளர் MP. ஷேக் இஸ்மாயில், தமுமுக மாவட்ட துணை செயலாளர் A. ஜலில் அப்பாஸ், அறந்தாங்கி நகர துணை செயலாளர் இன்ஜினியர் பாசித் கான், அன்னவாசல் தமுமுக ஒன்றிய செயலாளர் Er. A.ரியாஸ் முகம்மது, அன்னவாசல் நகர செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் NA. தைம்மியா மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING புதுக்கோட்டை மாவட்டம்.
TM.ரஃவுப் ரஹிம் மமகவில் இருந்து விலகி பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது முன்னிலையில் மஜகவில் இணைந்தார்.
சென்னை.மார்ச்.21., இன்று மமகவின் எழும்பூர் பகுதி துணை செயலாளர் TM.ரஃவுப் ரஹிம் அவர்கள் மமகவில் இருந்து விலகி சென்னை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் முன்னிலையில் மஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் ராயபுரம் அபுத்தாகிர் மற்றும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் ஆகியோர் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, (#MJK_IT_WING) மத்திய சென்னை மாவட்டம் 21.03.2017
மஜக பொதுச்செயலாளருடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பணியாளர்கள் சந்திப்பு!
சென்னை. மார்ச்.21., இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பணியாளர்கள் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து, பணி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளித்தனர். இது குறித்து உடனடியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பணியாளர்களிடம் உறுதியளித்தார். இந்நிகழ்வில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமிம் அகமது உடனிருந்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சென்னை. #MJK_IT_WING 21.03.2017