குவைத் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணை செயலாளராக சகோ. இலங்கை மன்சூர் அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #மனிதநேய_கலாச்சார_பேரவை #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJK_IT_WING #IKP_குவைத்_மண்டலம் 55278478 - 60338005 - 65510446.
செய்திகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பரங்கிபேட்டை நகர அலுவலகம் திறப்பு…!
கடலூர்.நவ.29., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்க்கு மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை மாவட்ட செயலாளர் ஜாக்கீர் ஹுசைன் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட பெருளாளர் ஆயங்குடி பஜில், தலைமை கழகம் பேச்சாளர் கடலூர் மன்சூர், லால்பேட்டை அலி, பரங்கிபேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர், லையன்ஸ் கிளப் தலைவர், மஜக பரங்கிபேட்டை நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் பெருந்திரலாக கலந்து கொன்டனர் தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கடலூர்_தெற்க்கு_மாவட்டம்
குவியும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை MLA…!
நாகை.நவ.29., நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சியில் நாகூருக்கு அருகே நகராட்சி வாகனங்களால் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து இன்று (29/11/2017) அப்பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகூர்ருக்கும், வாஞ்சூருக்கும் இடையில் உள்ள அப்பகுதியை நேரில் பார்வையிட்டார். அதன்பிறகு நகராட்சி ஆணையரை தொடர்புக் கொண்டு இனி அப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும், அதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும், இப்போது இருக்கும் குப்பைகளை விரைந்து அகற்றுமாறும் உத்தரவிட்டார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 29.11.17
சேலத்தில் ஹாதியாவை வரவேற்ற மஜக நிர்வாகிகள்…!
சேலம்.நவ.29. உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நேற்று சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரிக்கு தனது படிப்பை தொடர வந்த ஹாதியாவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்ரார் பாஷா தலைமையில் மஜக மற்றும் மாணவர் இந்திய நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் மஜக மாவட்ட பொருளாளர் அமீர் உசேன், மாவட்ட துணைச் செயலார்கள் O.S.பாபு, சேட் ரஃபி, சையது முஸ்தபா, இளைஞரணி செயலாளர் அஸ்லம் கான், பகுதி நிர்வாகிகள் சாகுல், மொஹித் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாநகர்_மாவட்டம்
வீரப்பெண்மணி ஹாதியா அவர்களை வரவேற்ற மஜகவினர்!!
கோவை.நவ.29., தான் விரும்பிய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றதற்காக வீட்டுச்சிறை வைக்கப்பட்ட சகோதரி ஹாதியா. இறைவன் துணையால் அதை எதிர்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியை பெற்று மீண்டும் கல்வி கற்க சேலம் செல்வதற்காக நேற்று கோவை விமான நிலையம் வந்த ஹாதியா அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ் தலைமையில் மஜக வினர் வரவேற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், அன்சர், தொழிற் சங்க மாவட்டசெயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், பகுதி நிர்வாகிகள் காஜா, அபு மற்றும் நிர்வாகிகள் காஜா, இப்ராஹீம், நாசர், இல்முதீன் ஆகியோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 28.11.17