திருப்பூர்.டிச.04., நேற்று திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைகூட்டமும், அனுப்பர் பாளையம் கிளை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபு ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்கள் மஜகவின் செயல்பாடுகள் குறித்தும், டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை குறித்தும் விரிவாக பேசினார். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்களும், மனவாட்களும் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். இறுதியாக அனுப்பர்பாளையம் கிளை நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. செயலாளர் I.சாகுல்ஹமீத் அவர்கள், பொருளாளர் M.யாசர் அவர்கள், துணை செயலாளர். M.அசாருதீன் அவர்கள், மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் டிசம்பர் 6 போராட்டத்தில் அதிக நபர்கள் கலந்து கொள்வது எனவும். விரைவில் வடக்கு பகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருப்பூர்_மாவட்டம் 03.12.17
செய்திகள்
ஓகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.!, நடிகர் விசால் அரசியலுக்கு வரலாமா? மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முத்துப்பேட்டையில் பேட்டி..!
திருவாரூர்.டிச.04., நேற்று முத்துப்பேட்டையில் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஒகி புயலால் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு தலா 10 பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், காணாமல் போன மீனவர்களை மீட்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர்களை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எதிர் வரும் டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதி மன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க கோரி மஜக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும், இதில் அணைத்து சமுதாய மக்களும் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார். நடிகர் விஷால் R.K.நகர் தொகுதியில் போட்டியிடுகிறாரே? என செய்தியாளர்கள் கேட்டனர். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அவர்கள் சில ஆண்டு காலம் மக்கள் பணியாற்றிவிட்டு வரட்டும். சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி தேர்தல் அரசியல் களத்துக்கு வருவதை ஏற்க முடியாது. நேற்று வரை நடிகர் சங்கத்தில் மட்டுமே
முத்துப்பேட்டையில் SDPI கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி மஜகவில் இணைந்தனர்!
திருவாரூர்.டிச.04., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று (03.12.2017) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA முன்னிலையில் SDPI கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், நகரச் செயலாளர் தக்பீர் நெய்னா முகம்மது, நகர துணை செயலாளர் நாசர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.மைனூர் தீன், முன்னாள் நகர செயலாளர் ஆசாத் நகர் நியாஸ் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்:- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம். 03/12/2017.
பரங்கிப்பேட்டை மாணவர் இந்தியா நகர துணைச் செயலாளர் மரணம்..! மஜக மாநில பொருளாளர் நேரில் ஆறுதல்..!!
கடலூர்.டிச.3., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை நகர மாணவர் இந்தியா துணைச் செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று (2.12.17) காலை மாரடைப்பால் வபாத் ஆகிவிட்டார்கள். தகவல் அறிந்த மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com அவர்கள் அவரின் இல்லத்திற்கு சென்று அன்னாரின் தந்தை, தாய் மற்றும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். உடன் மாநில நிர்வாககுழு உறுப்பினர் J.S.ரிஃபாயி ரஷாதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, தலைமைசெயற்குழு உறுப்பினர்கள் செய்யது அபுதாஹிர், முஹம்மது யூசூப், ஷாஜகான், பாஷா, கடலூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 03.12.2017.
பற்றி எரிகிறது டிசம்பர் புரட்சி!..! நாகை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் மமகவிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!
நாகை.டிச.03., நாகை வடக்கு மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியத்தை சேர்ந்த கொள்ளிடம், துளச்சேந்திரபுரம், திருமுல்லைவாசல், வடகால், தைக்கால், கீரா நல்லூர், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த மமக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி நடைப்பெற்ற தைக்கால் கிராமத்திற்கு 3 KM முன்னதாக ஏராளமான கார்களிலும், 100 க்கு மேற்பட்ட பைக்குகளிலும் மஜக தொண்டர்கள் கொடிகளுடன் பொதுசெயலாளரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் வாகன ஊர்வலத்தை நூற்றுகணக்கான பொதுமக்கள் சாலைகள் ஒரங்களில் கை அசைத்து வரவேற்றனர். தைக்கால் கிராமத்தில் வீரியமான மஜக முழங்கங்களோடு மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார். மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் மற்றும் ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_வடக்கு_மாவட்டம்