ஓகி புயலில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.!, நடிகர் விசால் அரசியலுக்கு வரலாமா? மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முத்துப்பேட்டையில் பேட்டி..!

image

திருவாரூர்.டிச.04., நேற்று முத்துப்பேட்டையில் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

ஒகி புயலால் உயிரிழந்த  மக்களுக்கு தமிழக அரசு தலா 10  பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், காணாமல் போன மீனவர்களை மீட்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீட்பு  மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர்களை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதிர் வரும் டிசம்பர்-6 அன்று பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதி மன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க கோரி மஜக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும், இதில் அணைத்து சமுதாய மக்களும் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

நடிகர் விஷால் R.K.நகர் தொகுதியில் போட்டியிடுகிறாரே? என செய்தியாளர்கள் கேட்டனர்.

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அவர்கள் சில ஆண்டு காலம் மக்கள் பணியாற்றிவிட்டு வரட்டும்.
சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி தேர்தல் அரசியல் களத்துக்கு வருவதை ஏற்க முடியாது.

நேற்று வரை நடிகர் சங்கத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்த நடிகர் விஷால் இன்று திடீரென R.K நகர் இடைத்தேர்தலில் களமிறங்கியிருப்பது குழப்பத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது இதை மக்கள் ரசிக்கவில்லை முகம் சுழிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இச்சந்திப்பின்போது துணை பொதுச்செயலாளர் ராவுத்தர் ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், நகர செயலாளர் தக்பீர் நெய்னா முகம்மது, நகர துணை செயலாளர் நாசர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைனூர்தீன், முன்னாள் நகர செயலாளர் ஆசாத்நகர் நியாஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_முத்துப்பேட்டை
03-12-2017