நாகை. டிச.06., பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்களும, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், பிரநிதிகளும் பங்கேற்றனர். நாகை தெற்கு மாவட்ட மஜக சார்பில் நாகை இரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராடத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் அவர்கள் தலைமை வகித்தார். மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி. ஜெ.எஸ். ரிஃபாயி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் பாண்டியன், திராவிட கழக மாவட்ட செயலாளர் புபேஸ் குப்தா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிவானந்தம், அப்துல் கலாம் பேரியக்கம் நிறுவனர் பாரதி.செந்தமிழன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட
செய்திகள்
பாபர் மசூதிக்காக ஐயப்ப சாமி வீர முழுக்கம்..! மஜக நடத்திய டிசம்பர் 6 போரட்டத்தில் எழுச்சியும் ! நல்லிணக்கமும் !!
சென்னை. டிச.06., இன்று டிசம்பர் 6 மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போரட்டம் நடத்தப்பட்டது.. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் ஜனநாயக அமைப்புகளின் பிரநிதிகள் கலந்துக் கொண்டனர்.. அதில் இந்து, கிறித்துவ, தமிழ் மக்களும் பரவலாக பங்கேற்றதன் மூலம் மஜக இப்போராட்டத்தை பொதுமைப் படுத்தியுள்ளது. சென்னையில் பாபர் மஸ்ஜித்தை கட்டக்கோரி ஒரு ஐயப்ப சாமி பக்தர் மேடை எறி முழக்கமிட்டு, அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.. சென்னையில் பல சமூக பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் J.M.ஆரூன் Ex.Mp அவர்களும் பங்கேற்றனர்.. சமூதாய ரீதியாக தேவர் சமுதாயம் சார்பில் அகில இந்திய பெடரல் பிளாக் தலைவர் ஆனந்த முருகன், யாதவ் சமுதாயம் சார்பில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ யாதவ் , கவுண்டர் சமுதாயம் சார்பில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, அவர்கள், தலித் சமுதாயம் சார்பில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை
நீங்காத நினைவுகள்! மஜகவின் மீது அன்புக் காட்டியவர் அம்மா…!
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) கடந்த வருடம் இதே நாளில் (04/12/2017) சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன், அங்கு என்னோடு ஹாரூன், நாசர், மைதீன் உலவி, செல்லச்சாமி ஆகியோரும் இருந்தனர். மாலை 6 மணியளவில் தொலைக் காட்சிகளில் பரபரப்பான செய்தி ஒடியது. அப்பபோலோவில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வர பரபரப்பு தொற்றியது. அந்த திருமண நிகழ்வு மாலை 7 மணியளவில் நடந்தது. அதற்கு மானாமதுரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கென்னடி மாரியப்பன் வந்திருந்தார். கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்ததாக கூறி, உடனே புறப்பட்டார். நேரம் ஆக, ஆக தொலைக்காட்சிகளில் விவாதங்கள் உருவாகிறது. நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்தோம். தொலைக்காட்சிகள் என்னிடம் அலைப்பேசி வழியாக பேட்டி அடுத்து நேரலையாக ஒளிப்பரப்பினார்கள். அதுபோல பல தலைவர்களிடமும் நள்ளிரவு வரை பேட்டி எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அன்று இரவுப் பொழுது கழிந்து, காலை விடிந்ததும் பத்திரிக்கைகளிலும் இதுதான் தலைப்புச் செய்தி. நாங்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 அன்று போராட்டத்தை அறிவித்திருந்தோம். தமிழக முதல்வரின் உடல் நலமும்,
தேங்கிய மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை! MLA நேரில் ஆய்வு…
கடந்த நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்த வரும் நிலையில், நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அவற்றை துரிதமாக வெளியேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 19 வது வார்டில் தேங்கி இருக்கும் மழை நீரை நேரில் வந்து பார்வையிட்ட MLA அவர்கள், அவற்றை துரிதமாக 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அருகில் இருந்த கோயிலுக்கும் சென்று மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அங்கு இருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். தகவல்:- நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 04.12.17
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக கோவை தெற்கு பகுதி செயல்வீரர்கள் கூட்டம்!
கோவை.டிச.04., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை தெற்கு பகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் பகுதி செயலாளர் காஜா உசேன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்ட துணைச் செயலாளர்கள் ABT.பாருக், TMS.அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பாபர் பள்ளியின் வரலாறு குறித்து இளைய தலைமுறையினருக்கு விளக்கி எழுச்சி உரையாற்றினார்கள், மேலும் டிசம்பர்-6 ஆம் தேதி மஜக முன்னெடுக்கும் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் குறித்தும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர் அலி, மாநில கொள்கை விளக்க பேச்சாளர் இப்ராஹீம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர் ரபீக், சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர் அக்பர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர்