திருவண்ணாமலை.டிச.17., திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் ஜமாத்தினர்களும் மற்றும் பிற கட்சிகளிலிருந்து விலகியும் 50க்கும் மேற்பட்டோர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக இறையூரில் இரண்டு இடங்களில் பொதுச்செயலாளர் அவர்கள் கட்சியின் கொடிகளை ஏற்றி வைத்தார். அதணைத் தொடர்ந்து செங்கத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் அவர்கள் மஜகவின் நகர அலுவலகத்தை திறந்து வைத்தார். இங்கும் பொதுச்செயலாளர் முன்னிலையில் 25பேர்கள் மஜகவில் தங்களை இணைத்துகொண்டனர். நகர அலுவலக வாயிலில் மாநில துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். பிறகு சமீபத்தில் விபத்தில் மரணமடைந்த செங்கம் ஒன்றிய துணை செயலாளர் இதாயத்துல்லா அவர்களுடைய இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய பொதுச்செயலாளர் அவர்கள் தலைமையின் சார்பில் நிதி உதவியை வழங்கினார். இந்நிகழ்வுகளின் போது துணை பொதுச்செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத் மாநில துணை செயலாளர் பல்லவரம் ஷபி மாவட்ட செயலாளர் ஹாஜா ஷெரீப், பொருளாளர் செய்யது முஸ்தபா, ஷபீர் மற்றும் அணைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்
செய்திகள்
MKP துபை மண்டலம் ஹோரல் அன்ஸ் பகுதியின் ஆலோசனை கூட்டம்..!
துபாய்.டிச.17., துபை மண்டல மனிதநேய கலாச்சார பேரவை ( MKP) ஹோரல் அன்ஸ் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துபை மண்டல செயலாளர் யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துபை மண்டல பொருளாளர் லால்பேட்டை சபீக் மற்றும் மண்டல துணைச் செயலாளர்கள் கட்டிமேடு ஜாகீர், ஹம்தான், காயல் சபீர், அல் கூஸ் பகுதி செயலாளர் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமீரக துணைச் செயலாளர் அப்துல் ரெஜாக், அமீரக ஊடக பிரிவு செயலாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். ஹோரல் அன்ஸ் பகுதி பொறுப்பாளர் பேராவூரணி ஆரிப் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார். தகவல்; #MKP_ ஊடக_பிரிவு #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKP_துபை_மண்டலம். 15.12.17
தோழர். திருமுருகன் காந்தி மஜக தலைமையகம் வருகை …
சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி நல்லெண்ண வருகை புரிந்தார். அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து உரையாடினார். இந் நிகழ்வில் மஜக இணை பொதுச்செயலாளர் KM.மைதீன் உலவி, பொருளாளர் எஸ். எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் JS. ரிபாயி ரஷாதி, துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாப்தீன், மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA. தைமிய்யா, A. சாதிக் பாட்ஷா, நாச்சிக்குளம் தாஜுதீன் மற்றும் அண்ணன் AS. அலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்
டிசம்பர் எழுச்சி தொடர்கிறது…! திருவண்ணாமலையில் 250 பேர் மஜகவில் இணைந்தனர்..!!
திருவண்ணாமலை.டிச.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுகவில் முன்பு செயல்பட்டு கொண்டிருந்தவர்கள் 200 பேரும் இதர கட்சிகள், அமைப்புகளை சர்ந்த 50 பேரும் இன்று (16/12/2017) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். முன்னதாக 100க்கும் மேற்பட்ட கார்கள், பைக் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை திருவண்ணாமலையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாவட்டம் முழுவதிலிமிருந்து ஷபீர் அகமது தலைமையில் வருகை தந்தவர்களை மஜக மாவட்ட செயலாளர் ஹாஜா செரீப் வரவேற்று பேசினார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் R.K.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதை சட்டம் போட்டு, திட்டம்போட்டு தடுக்க முடியாது என்பது நடைமுறையில் தெரிந்துவிட்டது, பொதுமக்கள் சுயமறியாதை உணர்வுடன் செயல்பட்டு பணம் வாங்கமாட்டோம் என சத்தியம் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார். கவர்னர் அவர்கள் கக்கூஸை ஆய்வு செய்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என மற்றொரு கேள்வியை எழுப்பினர். கவர்னர் தன் எல்லைக்குள் நின்று செயல்பட வேண்டும். அவர் வரம்பு மீறக்கூடாது. அவர் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கோப்புகளை பார்க்க வேண்டும்.
அய்யா பழ. நெடுமாறன் புத்தகம் தற்போது விற்பனையில்..
சென்னை.டிச.16., அய்யா.பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய "உருவாகாத இந்திய தேசமும், உருவான இந்து பசிசமும்" என்ற நூல் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. மேடை பேச்சாளர்களும், ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று விரும்பிகளுக்கும் மிகப்பெரிய ஆவண களஞ்சியமாக இந்நூல் தெரிகிறது. இந்நூல் விற்ப்பனையை மஜக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மஜக பொருளாளர் எஸ். எஸ். ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் உள்ளிடயோர் பங்கேற்றனர். இந்நூலை பெற விரும்புவோர் தொடர்புகொள்க கபீர் - 04443514550 தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை