திருவாரூர்.டிச.31., இன்று திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் செய்தியாளர்கள் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து ரஜினிகாந்த அவர்களின் அரசியல் அறிவிப்பு குறித்து பேட்டி எடுத்தனர். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தாவது:- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமேன்றாலும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த, கமல்ஹாசன், விஷால் என அனைவருக்கும் உரிமை உண்டு. நல்ல செயல்பாடுகளும், மக்கள் ஆதரவும் இருந்தால் ஆட்சிக்கு வரலாம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் என பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்த. சகோதரர் ரஜினிகாந்த அவர்கள்,இன்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திக்கிறார். அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கேப்டன் விஜயகாந்த அவர்கள், டாக்டர் கலைஞர் அவர்களும்,டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்களும் அரசியலில் வலிமையுடன் செயல்பட்டுக் கொண்டருக்கும் போது துணிச்சலுடன் அரசியல் களம் கண்டார். இன்று ஒரு வெற்றிடம் ஏற்பட்டது போல தோற்றம் உருவாகியாருக்கும் காலக் கட்டத்தில் அவர் அரசியலுக்கு வருவது சந்தேகங்களை உருவாக்குகிறது. அவரது ரசிகர்கள் எல்லோரும் வாக்ககளர்களாக அரசியலில் மாறுவார்களா?என தெரியாது. கழகங்கள் இல்லாத தமிழகம், கவலைகள் இல்லாத தமிழகம் என்ற முழக்கத்தை பாஜக முன் வைத்துள்ள நிலையில் அக்கட்சி தலைவர்கள் போட்டிப்
செய்திகள்
நெல்லை மூலக்கரைப்பட்டியில் மஜகவின் புதிய கிளை உதயம்..!
நெல்லை.டிச.31., நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகம்மது அலி இக்பால் தலைமையில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன் மற்றும் சுல்தான்கனி ஆகியோர் முன்னிலையில் மூலக்ககரைப்பட்டி கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 31.12.2017 காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல்ஹமீது கலந்து கொன்டார். நிர்வாகிகள் கலந்தாலோசனைக்கு பிறகு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. செயலாளர். J.அமீர் கான் S/O.ஜமால் அப்துல் நஷீர் (9566503545) பொருளாலர். M.அகமது மீரான். S/O முகம்மது காசிம் (7418067382) துணைச்செயலாளர்கள். 1.M.அமீர் (8056615574) 2.M.சேக் முகம்மது (8220713556) 3.N.சாகுல் ஹமீது (7373635793) தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நெல்லை_கிழக்கு_மாவட்டம்
கத்தார் மண்டல MKPயின் நிர்வாக ஆலோசனை கூட்டம்…!
தோஹா.டிச.31., மனிதநேய கலாச்சார பேரவையின்(MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் கடந்த 28.12.17 அன்று நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். மண்டல IT WING செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார், மண்டல ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டலச் துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO வாஜீத், வர்த்தக அணி செயலாளர் சேக் முஹய்தீன், தொண்டரணி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டு பணி குறித்து முதல்கட்ட வேலையை துவங்கப்பட்டு, பின்பு நிதி கட்டமைப்பு, கிளை நிர்வாகிகளை சந்திப்பது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் தொடர்புக்கு : +974 55734012 28.12.2017
மஜக நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம்..! தலைமை செயற்குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் பங்கேற்பு..!!
நாகை.டிச.31., நாகை வடக்கு மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பொறையாரில் நேற்று மாலை 6 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை வடக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களா தலைமை நிர்வாக குழு உறுப்பினர் சகோ.A.S.அலாவுதீன் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோர் வருகை தந்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் M.அபுசாலிஹ், A.J.சாகுல் ஹமீது, S.மிஸ்பாஹுதீன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நாகை வடக்கு மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து கலந்தாய்வு நடைப்பெற்றது. கூட்டத்தின் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1) 14 ஆண்டுகள் நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் சாதி, மத, அரசியல் பேதமின்றி பொதுமன்னிப்பு கீழ் விடுதலை செய்ய வேண்டுமென ஆட்சியர்களிடம் வலியுறுத்துவது. 2) பீகார் மாநிலம் போன்று தமிழகத்திலும் உடனடியாக பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும். 3) இயற்கை விவசாயத்தை மத்திய, மாநில அரசுகள் ஊக்கு விக்க வேண்டும். 4) காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவது. 5) முத்தாலக் விவகாரத்தில் சட்டம் இயற்றுவதை மத்திய அரசு கை விட வேண்டும்.
SP.பட்டினத்தில் மஜக கிளை உதயம்…!
தொண்டி. டிச.30., இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் சீனி முகம்மது,தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் A.M.ஹாரிஸ், மாநில செயற்குழு உறுப்பினர் MMH.முபாரக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்களின் அறிவுறுத்தளின் படி, மாவட்ட துணை செயலாளர் முகம்மது, வர்த்தகரணி செயலாளர் இப்னு சூது, மாவட்ட விவசாய அணி ராஜா ஆகிய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளராக சுல்தான், பொருளாளராக முகம்மது ரபீக், துணை செயலாளர்களாக செய்யது அன்சாரி, நல்ல இப்ராஹீம் பாதுஷா ஆகியோர் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு தலைமைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாநில செயலாளர் சீனி முகம்மது முன்னிலையில் ஏராளமானோர் மஜகவில் இணைந்ததனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு