சென்னை.ஏப்.13., சென்னை சேப்பாக்கத்தில் தமிழக விவசாயிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தலைவர் காவேரி தனபாலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துக் கொண்டு உறையாற்றினார். அப்போது காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் மஜக பங்கேற்கும் என்றார். கர்நாடகவில் சித்தா ராமையாவும், எடியுரப்பாவும், தேவ கொளடாவும் ஒரே குரலில் காவேரிக்காக போராடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்கிறோம். முதலில் இவ்விசியத்தில் திமுகவும், அதிமுகவும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும். எல்லோரும் இணைந்து காவேரிக்காக குரல் கொடுக்கவே மக்கள் விரும்பிகிறார்கள் என்று பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்
செய்திகள்
காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஏப்.13., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலயை மூட கோரியும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் முன்னணி அமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழ்நாடு கொங்கு இளைஞர்ப் பேரவையின் நிறுவனத்தலைவர் தனியரசு MLA ஆகியோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். இவர்களுடன், மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
காவல்துறையை உடனே விடுதலை செய்..!
பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
சென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் "பெருங்கனவு" பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று மாலை 5.00 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில்.. பழனிபாபா இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் போராடவில்லை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அனைத்து தமிழின மக்களுக்காகவும் போராடினார். ஈழத்தமிழர் பிரச்சனைக்கு வலுவாக குரல் கொடுத்தார், பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை வாணியம்பாடியில் நடத்தினார். பழனி பாபா மரணிக்கும் காலத்தில் ஜிகாத் கமிட்டியை சமுதாய அமைப்பாக மாற்றி விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியல் கட்சியை தொடங்க விரும்பினார். அவர் விரும்பியதை தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி செய்து வருகிறது என்று குறிபிட்டார்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூலை வெளியிட அதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்று கொண்டார். பல்வேறு இயங்கங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபெற்று
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!
சென்னை.பிப்.24., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருப்பாளர் & மாநிலச் செயலாளர் N.A. தைமிய்யா அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் மாவட்டச் செயலாளா் A.முஹம்மது ஹாலித், மாவட்ட பொருளாளா் பிஸ்மி, மாவட்டத் துணை செயலாளா்கள் பீர் முஹம்மது, அப்பாஸ், அணி செயலாளா்கள் மூஸாகனி, யூசுப், காஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் கொடி ஏற்றுதல், தெருமுனை கூட்டம், இரத்த தான முகாம்கள், கிளைகளை அதிகப்படுத்துதல், விரைவில் மாவட்டப் பொதுக்குழு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்