ஜுன்-10 அன்று மாலை 4:30 மணியளவில் நக்கம்பாடியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை கூட்டத்தில் கிளை செயலாளராக S.முபாரிஸ், கிளை பொருளாளர் A.முகம்மது ஷேக் ,H.முஹம்மது ஹாலித், S.சமீர் அக்தர், S.சாகுல் ஹமீது இளைஞரணி செயலாளராக J.பாசித் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது,கிளியானுர் அபுசாலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தைக்கால் ஷாஜஹான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் இறுதியில் கிளை செயற்குழு உறுப்பினர் I.முனவர்தீன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. -மஜக ஊடகபிரிவு
செய்திகள்
ஜாகீர் நாயக் அவர்களை பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கை விட வேண்டும் : மஜக பொதுச்செயலாளர்
சர்வதேச புகழ்பெற்ற அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களை குறிவைத்து மத்திய அரசு முடுக்கிவிடும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.அவருக்கு எதிராக நீண்ட காலமாக காவி இயக்கங்கள் திட்டமிட்டு வரும் நச்சு முயற்சிகளில் ஒன்றாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இதனை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஒரு முஸ்லிம் சமூக தீமைகளுக்கு,தவறுகளுக்கு எதிராக போராடுவதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்று பேசியதை எடுத்துக் கொண்டு அவரை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துவது மனசாட்சிக்கும்,அறிவுக்கும் எதிரான செயலாகும். அவரின் பேச்சின் அர்த்தமென்பது மது,விபச்சாரம், சுரண்டல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான முழக்கமாகும்.ஆனால் வேண்டுமென்றே அவரின் பேச்சின் அர்த்தத்தை திசை திருப்புவது ஜனநாயக விரோத செயலாகும். I.S பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வன்முறைகளையும் தீவிரமாக எதிர்ப்பவர்களில் ஜாகிர் நாயக் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார்.அமைதிக்கும்,ஜனநாயகத்திற்கும் எதிரான சக்திகளை கண்டித்து வருபவராகவும் இருக்கிறார். ஆழமான பண்முக அறிவும்,சிந்தனையாற்றலும் அவருக்கு உலகமெங்கும் பல்வேறு மதங்களை சேர்ந்த லட்சணக்காண ஆதரவாளர்களையும்,ஆர்வலர்களையும் பெற்று கொடுத்துள்ளது. பல்வேறு மதங்களை ஆராய்ச்சி செய்து,மதங்களுக்கிடையே இருக்கும் ஒருமைப்பாடுகளை தனது விவேகமான உரைகளின் மூலமாக எடுத்துரைத்து வருகிறார். அவரது நிகழ்ச்சிகளில் பல்வேறு மததலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,பல்வேறு அறிவாளிகள் என பலரும் பங்கேற்று உள்ளனர். பிரபல
முத்துபேட்டையில் மஜக பொதுச்செயலாளர்.
நேற்று முத்துப்பேட்டைக்கு *மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA* அவர்கள் வருகை தந்தார்.ஆசாத் நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற அசாருதீன் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முத்துப்பேட்டை மக்களுடன் நெருங்கிய தோழமை வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு பொது மக்களும், ஜமாத்தார்களும், பிரமுகர்களும் கட்டிதழுவி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறினர். தொடர்ந்து ஏராளமானோர் அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்து வாழ்த்துக்கள் கூறினர். முத்துப்பேட்டை சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான *TVS.Dr.ஹைதர் அலி* அவர்களின் அழைப்பினை ஏற்று அவர் இல்லத்துக்கு சென்று உரையாடினார். அன்று மாலை முத்துப்பேட்டை மஜக நகர ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். பிறகு ஜாம்புவானோடை சென்று முத்துப்பேட்டை தர்ஹா தலைவரும், தர்ஹாக்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் நிறுவனருமான S.S.பாக்கர் அலி சாஹிப் அவர்களை சந்தித்தார். நாகை தொகுதியில் தனது வெற்றிக்கு பணியாற்றியதற்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்துகொண்டார். -மஜக ஊடகப்பிரிவு
துளசியாப்பட்டிணத்தில் மஜக பொதுச்செயலாளர்
நேற்று மாலை நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திற்கு மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் வருகை புரிந்தார்.மஃரிப் தொழுகைக்கு பிறகு அவ்வூர் மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது தங்கள் ஊருக்கு #சாலை_வசதிகள் மேம்பாடு மற்றும் #ஆரம்ப_சுகாதார_நிலையம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து தரும்படி அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களுடன் பேசுவதாக பொதுச்செயலாளர் கூறி விடைபெற்றார். பிறகு ஜமாத் துணைத்தலைவர் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களை வீட்டில் சந்தித்து உரையாடிவிட்டு புறப்பட்டார். -மஜக ஊடகப்பிரிவு
ஈகை பெருநாள் வாழ்த்துகள்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை கல் மனம் கொண்டவர்களையும் பொன்மனம் கொண்டவர்களாக மாற்றிடும் இனிய மாதம்தான் ரமலான் இம்மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல் இறையச்சத்தோடு நோன்பு நோற்று உள்ளத்தையும் உணர்வையும் ஒழுங்குபடுத்திடும் இனையற்ற பயிற்சியை உலகம் முழுதும் முஸ்லிம்கள் பெறுகிறார்கள் தனக்காகவும் பிறருக்காகவும் பசியோடு மனம் உருகி ஒவ்வொருவரும் செய்யும் பிரார்தனைகளும் திருக்குஆனின் பக்கங்களில் விழிகளை புதைத்துக் கொள்ளும் அனுபவங்களும் வார்த்தைகளில் வர்னிக்க முடியாத பரவசத்தை இம்மாதம் முழுதும் தருகின்றன இம்மாதத்தின் நிறைவில் அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் வானத்தில் வளைந்த கவிதையாய் தென்படும் பிறையை பார்த்த மகிழ்ச்சியில் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாட உலகமெங்கும் முஸ்லிம்கள் தயாராகிறார்கள் புத்தாடைகளையும், வாசனை திரவியங்களையும், மனம் வீசும் ருசிகர உணவுகளையும்தாண்டி இறைவனை புகழ்பாடி தொடங்கும் பெருநாள் தொழுகையும், அங்கே ஒருவரையொருவர் பகை மறந்து, மனமுவந்து, கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறும் உணர்ச்சிமயமான நிகழ்வுகள் இந்த நாள் மீன்டும் எப்போது வரும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன அன்றைய தினம் அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் அள்ளி,