நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடியில் மஜக உதயமானது.

image

ஜுன்-10 அன்று மாலை 4:30 மணியளவில் நக்கம்பாடியில்  நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை கூட்டத்தில் கிளை செயலாளராக S.முபாரிஸ், கிளை பொருளாளர் A.முகம்மது ஷேக்  ,H.முஹம்மது ஹாலித், S.சமீர் அக்தர், S.சாகுல் ஹமீது இளைஞரணி செயலாளராக J.பாசித் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.M.மாலிக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது,கிளியானுர் அபுசாலி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தைக்கால் ஷாஜஹான் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தின் இறுதியில் கிளை செயற்குழு உறுப்பினர் I.முனவர்தீன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

-மஜக ஊடகபிரிவு