ஜாகீர் நாயக் அவர்களை பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கை விட வேண்டும் : மஜக பொதுச்செயலாளர்

image

சர்வதேச புகழ்பெற்ற அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களை குறிவைத்து மத்திய அரசு முடுக்கிவிடும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.அவருக்கு எதிராக நீண்ட காலமாக காவி இயக்கங்கள் திட்டமிட்டு வரும் நச்சு முயற்சிகளில் ஒன்றாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
இதனை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

ஒரு முஸ்லிம் சமூக தீமைகளுக்கு,தவறுகளுக்கு எதிராக போராடுவதில் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்று பேசியதை எடுத்துக் கொண்டு அவரை தீவிரவாதத்தோடு தொடர்பு படுத்துவது மனசாட்சிக்கும்,அறிவுக்கும் எதிரான செயலாகும்.

அவரின் பேச்சின் அர்த்தமென்பது மது,விபச்சாரம், சுரண்டல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான முழக்கமாகும்.ஆனால் வேண்டுமென்றே அவரின் பேச்சின் அர்த்தத்தை திசை திருப்புவது ஜனநாயக விரோத செயலாகும்.
 

I.S பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வன்முறைகளையும் தீவிரமாக எதிர்ப்பவர்களில் ஜாகிர் நாயக் எப்போதும் முன்னிலையில் இருக்கிறார்.அமைதிக்கும்,ஜனநாயகத்திற்கும் எதிரான சக்திகளை கண்டித்து வருபவராகவும் இருக்கிறார்.

ஆழமான பண்முக அறிவும்,சிந்தனையாற்றலும் அவருக்கு உலகமெங்கும் பல்வேறு மதங்களை சேர்ந்த லட்சணக்காண ஆதரவாளர்களையும்,ஆர்வலர்களையும்  பெற்று கொடுத்துள்ளது.

பல்வேறு மதங்களை ஆராய்ச்சி செய்து,மதங்களுக்கிடையே இருக்கும் ஒருமைப்பாடுகளை தனது விவேகமான உரைகளின் மூலமாக எடுத்துரைத்து வருகிறார்.

அவரது நிகழ்ச்சிகளில் பல்வேறு மததலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,பல்வேறு அறிவாளிகள் என பலரும் பங்கேற்று உள்ளனர்.

பிரபல இந்துமத அறிஞர் ஶ்ரீஶ்ரீ.ரவிசங்கர் அவர்களும்,ஜாகிர் நாயக்கோடு நிகழச்சிகளில் பங்கேற்று உரையாடி உள்ளார்.
https://m.facebook.com/needhiyinpakkam/

சமய நல்லிணக்கத்தையும், மதங்களுக்கிடையே  உள்ள புரிந்துணர்வுகளையும்,மக்களிடையே பிரச்சாரம் செய்துவரும் இதுபோன்ற அறிஞர்களை மதவெறி சக்திகள் எப்போதும் ஏற்பதில்லை.

அந்த பின்னனியிலேயே மத்திய அரசு ஜாகிர் நாயக்கை குறி வைத்திருக்கிறது.இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிப்பவையாகும்.

எனவே மத்திய அரசு ஜாகிர் நாயக் விசயத்தில் தனது போக்கை மாற்றிகொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்தையும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி.MLA
பொதுசெயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.