மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா! நெல்லையில் மஜக சார்பில் இரத்ததான முகாம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA துவக்கி வைத்தார்!


நெல்லை பிப்.28

மனிதநேய ஜனநாயக கட்சி ஆறாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் வண்ணார பேட்டையில் உள்ள மஜக அலுவலகத்தில் வைத்து அன்னை வேளாங்கன்னி இரத்த வங்கியோடு இணைந்து இரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இரத்ததான முகாமை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் துவக்கி வைத்து கடந்தகால சாதனைகளை விளக்கி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாய், அவர்கள் வாழ்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, துணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார், காயல் A1மைதீன், செய்யதலி, அணி நிர்வாகிகள் மன்சூர்அலி, நெல்லை ஜாஹிர், ராபியா சேக், பத்தமடை கனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

தகவல்

#மஜக_தகவல்தொழில்நுட்பஅணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
28-02-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*