உலக மக்களை ஒன்றுபடுத்தும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான ரியோ_டி_ஜெனிரோ நகரில் நாளை தொடங்குகிறது. இந்த 31 வது ஒலிம்பிக் போட்டி 17 நாட்கள் நடைபெற உள்ளது. 76 ஆயிரம் கோடி செலவில், 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர்களுடன், 33 மைதானங்களில் நடைபெற உள்ளது. 85 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் அக்கண்டம் முழுதும் கொண்டாட்டம் நிலவுகிறது. #BRICS கூட்டமைப்பு நாடுகளில் ரஷ்யா, #இந்தியா,சீனா,தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு நாடுகளுடன் பிரேசிலும் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஒலிம்பிக் போட்டி கூர்ந்து கவனிக்கப்படுகிறது. 2012 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி அளவுக்கு ஆடம்பர செலவுகள் இல்லாமல் இன்று நாட்டின் அரசியல்-பொருளாதார நிலைக்கு ஏற்ப பிரேசில் கச்சிதமாக போட்டியை நடத்துவது பாராட்டத்தக்கது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முறை நம்நாடு நிறைய தங்க பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஆவல் எல்லோரும் இருக்கிறது. '#தங்க_மகன்கள்' ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ்,
செய்திகள்
மஜகவின் பொள்ளாச்சி நகரம் கண்ணப்பநகர் புதிய கிளை துவக்கம்…
ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர், கண்ணப்பநகர் புதிய கிளை நிறுவப்பட்டது. இன்னிகழ்வு பொள்ளாச்சி நகரசெயளாலர் ராஜா ஜமேஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயளாலர் அப்துல் பஷீர் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கைவிளக்கஅணி சகோ. கோவை நாஸர் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட செயளாலர் மீன்.அப்பாஸ் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட பொருளாலர் பதுருதீன் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட துணைச்செயளாலர் ரபீக் அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட MJTS துணை செயளாலர் ABS.அப்பாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் மேலும் மஜகவின் மாநில கொள்கைவிளக்க பேச்சாளர் சகோ.கோவைநாஸர் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட மனிதநேய சொந்தங்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை விளக்கமாக எடுத்துரைத்தார்கள். தகவல் : மஜக ஊடகபிரிவு கோவை மாவட்டம்
விவசாயத்துறை தொடர்பான 110 அறிவிப்புக்கு மஜக பொதுச்செயலாளர் வரவேற்பு…
(இனி விவசாயிகளின் நெல் கொள்முதல் பணிகள் மின்னனு சேவையாக மாற்றப்படும் இதன் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு விவசாயிகளின் நேரம் சேமிக்கப்படும் அனைத்து விபரங்களும் ஒளிவு மறைவின்றி இணையத்தில் வெளியிடப்படும் SMS மூலம் விவசாயிகளுக்கு தகவல் பரிமாறப்படும் இது போன்ற பல்வேறு விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்களை 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் அறிவித்தார் அதனை வரவேற்று மஜக பொதுச்செயளாலர் M_தமிமுன் அன்சாரி MLA பேசினார்) #அவரது_உரை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே... இன்றைய தினம் இந்த பேரவையிலே, மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்கள். அதை பாராட்டி வரவேற்கிறேன். தமிழ்நாடு வளம் பெற வேண்டும் என்பதற்காகவும், தமிழ் சமுதாயம் நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 110 விதியின் கீழ் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை குறுக்கீடு இன்றி அறிவிப்பதும், அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதும், செயல்படுத்திய திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வருவதும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. நோக்கம் தெளிவாக இருக்கும்போது, அதன் தாக்கம் உறுதியாக இருக்கும் என்பதில்
நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க அமைச்சரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை…
ஆக.03.,நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலைமையை சமாளிக்கும் வகையில் நகராட்சி சார்பாக டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைக்கு முழுமையாக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து நகராட்சி தலைவர் திருமதி. மஞ்சுளா சந்திரமோகனிடம், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி கலந்துரையாடினார். இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அவர்களை M. தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 50 லட்சம் கனஅடி நீர் நாகை தொகுதியில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 லட்சம் கனஅடி நீர் தான் கொடுக்கப்படுகிறது. குழாய்கள் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நீரிலும் குறைவு ஏற்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திட்டப்படி 50 லட்சம் கனஅடி நீர் கிடைக்க ஆவணம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இது குறித்து துரிதமாக முயற்சிகள் மேற்கொள்வதாக அமைச்சர் வேலுமணி, சட்டமன்ற உறுப்பினரிடம் கூறினார். தகவல் வெளியீடு: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
நபிகளோடு ஒப்பிட்டதற்க்கு மஜக முஸ்லிம் லீக் எதிர்ப்பு…
ஆக.03.,நேற்று வனத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,பல மத கடவுள்களோடு முதல்வர் அவர்களை ஒப்பிட்டு பேசினார்.அதுபோல நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசினார்.அப்போது முதல்வர் அவையில் இல்லை. உடனே முஸ்லீம் லீக் உறுப்பினர் அபூபக்கரும்,மஜக உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து சபாநாயகரிடம் ஆட்சேபனையை தெரிவித்தனர். அந்த ஆட்சேபனையை ஏற்று அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார்.பிறகு அவை முடிந்ததும் அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் அப்படி சொல்வது தவறு என்றும் ,அதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும் விளக்கியதும்,அமைச்சர் அதை புரிந்துக் கொண்டு தன் தவறை ஏற்றுக் கொண்டார். இவ்விஷயத்தில் கூட்டணி அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் இணைந்து செயல்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறையாகும். தகவல் :மஜக ஊடகபிரிவு